இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் 90 காலகட்டத்தில் மிக பெரிய இயக்குனராக இருந்தவர், ஆரம்ப கட்டத்தில் நடிகர் சரத்குமாரை வைத்து அதிக படங்கள் எடுத்து வந்த கே.எஸ் .ரவிக்குமார் படங்களில், கதை திரைக்கதை, வசனம் போன்றவைகளில் அவருடைய படத்தில் தனித்துவம் இருக்கும். சரத்குமார் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படத்திற்கு பின்பு கே.எஸ். ரவிக்குமார் மிக பெரிய உச்சத்துக்கு சென்றார்.
பாட்ஷா என்கிற மிக பெரிய ஹிட் படம் கொடுத்த ரஜினிகாந்த், நாட்டாமை படத்தை பார்த்த பின்பு கே.எஸ். ரவிக்குமாரை நேரில் அழைத்து நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் கதை தாயார் செய்யுங்கள் என சொல்ல, உடனே தயாரானது முத்து படம். இந்த படம் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவாகும் அளவுக்கு மிக பெரிய ஹிட் கொடுத்தது. மீண்டும் படையப்பா படத்தில் ரஜினிகாந்த் – கே.எஸ் ரவிக்குமார் கூட்டணி இணைந்து மிக பெரிய வெற்றியை கொடுத்தது.
கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருங்கிய நட்பு உண்டு, அந்த வகையில் ரஜினிகாந்த் இரண்டு மகள்களும் கே.எஸ்.ரவிக்குமார் உடன் நெருக்கி பழக கூடியவர்கள், அந்த வகையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் படத்துக்கான கோச்சடையான் படத்தின் கதையை தயார் செய்து கொடுத்தது கே.எஸ்.ரவிக்குமார். இதனை தொடர்ந்து மீண்டும் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் பின்பு அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்திடம், மீண்டும் ஒரு படம் அவரை வைத்து இயக்க கதை சொல்லி வந்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் ரஜினிகாந்த் பார்க்கலாம் என காக்க வைத்து தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என எதிர்பார்க்கபட்டது.
அதற்கான கதையையும் கேட்ட ரஜினி ஓகே சொன்னதாக கூறப்படுகிறது, ஆனால் திடீரென நெல்சனை ஓகே செய்தார் ரஜினிகாந்த், இந்நிலையில் பீஸ்ட் பட தோல்வியால் இயக்குனர் மாற்றம் செய்யப்படலாம் என வந்த போது, அதில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நெல்சன் ஓகே தான், அவரே தொடரட்டும் என ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார், மேலும் நெல்சன் இயக்கும் படத்தில் கதை, திரைக்கதை , வசனம் ஆகியவற்றை கே.எஸ்.ரவிக்குமார் கவனிக்கட்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தனக்கு வாய்ப்பு கொடுப்பர் ரஜினிகாந்த் என்கிற நம்பிக்கையில் ஜெயிலர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கவனிக்க முடிவு செய்தார். ஆனால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் பஸ்ட் லுக் போஸ்டரில் கதை, திரைக்கதை, வசனம் என்கிற இடத்தில் நெல்சன் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால் ரஜினியை நம்பி மோசம் போனது போதும் என முடிவு செய்த கே.எஸ்.ரவிக்குமார்.
ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வேலைகளை தொடங்கியுள்ள கே.எஸ்.ரவிக்குமார் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு போன்ற இயக்குனரை காக்க வைத்து ஏமாற்றுவது ரஜினிகாந்த் அவர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்வதர்க்கு அர்த்தம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.