நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து கடந்த சமீப காலமாக தொடர் தோல்வியை சந்தித்து வந்த நடிகர் தனுஷ்க்கு திருப்புமுனையாக அமைந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது, தொடர்ந்து குணச்சித்திர நடிகராக பாரதிராஜா பல படங்கள் நடித்து வந்தாலும், ஒரு நடிகராக திருச்சிற்றம்பலம் படத்தில் மூலம் பெரும் பாராட்டைப் பெற்றார் பாரதிராஜா.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் வெளியான அடுத்த சில நாட்களிலேயே, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாரதிராஜா. தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் பாரதிராஜா உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்ற இளையராஜா.
அங்கே பாரதிராஜா தூக்கத்தில் இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த இளையராஜா அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பாரதிராஜாவுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் இளையராஜா. இதனைத் தொடர்ந்து சினிமா துறையைச் சேர்ந்த பலர் பாரதிராஜாவின் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் சென்று உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜா உடன் நடித்த தனுஷ் பாரதிராஜா அட்மிட் ஆகியுள்ள மருத்துவமனைக்கு சென்று சுமார் 2 மணி நேரம் பாரதிராஜா உடன் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார். பின்பு அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு மருத்துவமனை அதிகாரிகளை அழைத்த தனுஷ், பாரதிராஜா மருத்துவச் செலவு மொத்தத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பரவால்ல சார், பாரதிராஜா ஒட்டுமொத்த செலவையும் ஏற்கனவே ஏசி சண்முகம் அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் பாரதிராஜா மருத்துவ செலவு மொத்தத்தையும் தனுஷ் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த தகவல் அறிந்த பாரதிராஜா சற்று நேரம் கண் கலங்கி விட்டதாக கூறப்படுகிறது.