சூட்டிங் வராமல் டிமிக்கி கொடுக்கும் அஜித்… பின்னணியில் ஐடி ரெய்டு தானம்.. அஜிக்கு என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உட்பட முக்கிய சினிமா பைனான்சியர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சொந்தமான இடங்களில் நடந்த மெகா ஐடி ரெய்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நிலை குலைய வைத்துள்ளது. பெரும்பாலான தமிழ் சினிமா பாதியிலேயே பொருளாதார சிக்கலை சந்தித்து பாதியிலே நிற்கிறது. இதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் கைவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, பெரிய படங்களும் பண பற்றாக்குறையால் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. மேலும் ஐடி ரெய்டில் சிக்கி உள்ள பெரும்பாலான சினிமா பைனான்சியர்கள் மீண்டும் சினிமாவில் பைனான்ஸ் செய்வதை தவிர்த்து வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்ய செய்ய முடிவில் இருக்கின்றனர். இந்த நிலையில் அஜீத் தற்பொழுது நடிக்கும் எச் வினோத் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார், இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த முடிந்த உடன் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்தவர். தற்பொழுது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் தேதி தொடங்க இருந்த நிலையில், தற்போது வரை படப்பிடிப்பு கலந்து கொள்ளாமல் அஜித் டிமிக்கி கொடுத்து பைக்கில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

இதன் பின்னணியில் சமீபத்தில் நடந்த சினிமா துறையினர் மீதான ஐடி ரெய்டு தான் காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் தயாரிப்பாளர் போனி கபூர் எடுக்கும் புதிய படத்திற்கு பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் தான் பைனான்ஸ் செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமா பைனான்ஸ் அன்புச் செழியன் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.

மேலும் அன்புசெழியன் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தேதி தள்ளிக் கொண்டே போகிறது, இதனால் அஜித் தொடர்ந்து ஐரோப்பியாவில் பைக் பயணத்தை முடித்துவிட்டு, இந்தியாவிலும் பைக் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.