இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் அட்லி. இதனால் அட்லி இயக்கும் படத்தில் சங்கரின் சாயல் இருப்பதை பார்க்க முடியும். சங்கரைப் பின்பற்றி பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என பிரம்மாண்டமாக எடுக்கின்றேன் என்பதற்காக சங்கரை பின்பற்றி தயாரிப்பாளருக்கு அதிக செலவை இழுத்து விடக் கூடியவர் இயக்குனர் அட்லீ.
சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2 படம் மிகப்பெரிய தோல்வி சிந்தித்து, பெரும் நஷ்டத்தை அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் அணைத்து துறைகளிலும் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமான துணை நடிகர்கள், டான்சர்கள், மற்றும் செட் அமைப்பதில் தொடங்கி லைட் வாடகைக்கு எடுப்பது வரை சங்கர் கமிஷன் அடித்த விவகாரம் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் அடுத்து சங்கரை வைத்து படம் இயக்குவதற்கு பல தயாரிப்பாளர்கள் தயங்கிய வருவது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் நடிகர் சாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஜவான் படத்தை ஷாருக்கான் சொந்தமாக தயாரிக்கிறார்.
மும்பையில் நடந்த படப்பிடிப்பின் போது, தேவையான அணைத்து பொருட்களும் நேரடியாக தயாரிப்பு நிறுவனம் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் முழுக்க முழுக்க அட்லியின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. தமிழ் சினிமா இயக்குனர்கள் அடிக்கும் செயலை நன்கு அறிந்தவர் நடிகர் சாருக்கான்,
இதனால் ஜவான் படத்தின் தயாரிப்பாளர் சாருக்கான், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புக்காக பத்து ஆடிட்டர்களை உள்ளே இறக்கி விட்டுள்ளார். ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஆடிட்டர் என பத்து ஆடிட்டர்களும் படப்பிடிப்பு தளத்தில் தீவிரமாக பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும், இது எதற்கு, எவ்வளவு வாடகை, எத்தனை தடவை பயன்படுத்த பட்டுள்ளது என தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அதில் பல பொருட்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல், சும்மாவே இருப்பது தெரிவந்துள்ளது. இதில் உச்சகட்டமாக ஹை ஸ்பீடு கேமரா ஓன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படாமல் இருக்கின்றது. கமிஷனுக்கு ஆசை பட்டு இதனால் தேவைக்கு அதிகமான பொருட்களை வாடகைக்கு எடுத்து அதை பயன்படுத்தாமல் கமிஷன் அடிக்கும் செயலை அட்லி செய்து வருவதாக ஆடிட்டர் மூலம் படத்தின் தயாரிப்பாளர் சாருக்கான் கவனத்திற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் சினிமா இயக்குனர்களின் தில்லாலங்கடி வேலையை தெரிந்து தான், ஆடிட்டர்களை களம் இறக்கிவிட்டு பரிசோதனை செய்துள்ளார் ஷாருகான். இந்த நிலையில் அட்லீயை நேரில் அழைத்து தேவையில்லாத பொருட்களை எதற்காக வாடகைக்கு எடுத்தீர்கள், தமிழ் சினிமாவில் கமிஷனுக்காக இயக்குனர்கள் இது போன்று செய்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் அது உண்மை தானா.? என அட்லீயிடம் நேரடியாக கேட்டுள்ளார் ஷாருகான்.
இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்ல முடியமால் சில நிமிடம் திகைத்துப் போன அட்லி, தேவையில்லாத பொருட்களை உடனே ரிட்டர்ன் செய்து விடுகிறோம் என அட்லீ தெரிவித்ததாக கூறப்டுகிறது. இந்நிலையில் ஷாரூக்கானிடம் கையும் களவுமாக அட்லீ மாட்டிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.