இந்த படத்தை அப்படியே காப்பியடித்து வெச்சுள்ளாரே அட்லீ… இதுக்கா இத்தனை கோடி….

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த அட்லீ, திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதனால் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை இந்திய முழுக்க உள்ள ரசிகர்கள் வைத்திருந்தனர்.‌ ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 375 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ராணுவ வீரரான அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கப் பெண்கள் படையுடன் களமிறங்கும் ஜெயிலர் மகனின் கதையே இந்த ஜவான்.‌ அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஷாருக்கான், மக்களுக்காக ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது தான் ஜவான் படத்தின் ஒன்லைன். ஜெயிலராக இருக்கும் மகன் ஷாருக்கான், சமூக விரோதிகளை வேட்டையாடுகிறார்.

அவருக்கு அப்பா ஷாருக்கான் எப்படி உதவுகிறார் என்பது தான் மொத்த கதையும். மேக்கிங்கில் மிரட்டியுள்ள அட்லீ, கதையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. படத்தின் முதல் காட்சி முடிந்ததும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே எழுந்தன. அதேசமயம் அடுத்தடுத்த காட்சிகளின் முடிவில் படத்துக்கு கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்களும் எழ தொடங்கின.

குறிப்பாக அட்லீ பல படங்களை காப்பி அடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ஒரு சீன்கூட ஃப்ரெஷ்ஷாக இல்லை. மணி ஹீஸ்ட், ஆரம்பம், சர்கார், இந்தியன், ரமணா என அத்தனை படங்களையும் இதில் கலந்திருக்கிறார் என கூற ஆரம்பித்தனர். குறிப்பாக சத்யராஜ் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான தாய்நாடு திரைப்படத்தின் காப்பி தான் ஜவான் என்று கூறி வருகின்றனர்.

அதாவது சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையும், அட்லீ இயக்கியுள்ள ஜவான் கதையும் ஒன்று தான் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கதை, திரைக்கதை என அப்படியே தாய் நாடு படத்தை அட்லீ காப்பி பேஸ்ட் செய்துவிட்டதாக கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே ஜவான் பிளாஷ்பேக் காட்சிகள், விஜயகாந்தின் ரமணா படத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் தற்போது சத்யராஜ்ஜின் தாய்நாடு திரைப்படம் தான், ஜவானின் ஒரிஜினல் தமிழ் வெர்ஷன் என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், அட்லீ இதுவரை பண்ண எல்லா படங்களில் இருந்தும் ஒரு பத்து நிமிட காட்சிகளை எடுத்து, ஸ்லோமோஷன், சிஜி, பளாஷ்பேக் என ஜவான் படத்தை இயக்கியுள்ளார் அட்லீ என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். ஜவான்’ பல தமிழ் திரைப்படங்களின் கலவையாக இருப்பதால் அட்லியிடம் ஒரிஜினிலாட்டி இல்லை என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் கடுமையாக வைத்து வருகின்றனர்.

80, 90களின் தேச பக்தி தமிழ்ப் படங்கள், இயக்குநர் ஷங்கரின் படங்கள் தொடங்கி வில்லு',கத்தி’, ஆரம்பம்',மெர்சல்’, ரங் தே பசந்தி',சர்தார்’ எனப் பல படங்கள் கண்முன்னே வந்துபோகின்றன. உடம்பு முழுக்க தமிழ் சினிமா ஊறிப்போன ஒருவரால்தான் இத்தனை கிளிஷேக்களுடன் படம் இயக்க முடியும் என்கிற அளவுக்கு ஏகப்பட்ட ரெஃபரன்ஸ்கள் எட்டிப் பார்க்கின்றன. இதனாலேயே நிறையக் காட்சிகள் `இது அதுல்ல…’ என்று யோசிக்க வைக்கின்றன.

இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக இருந்து டைரக்டராக அறிமுகமானவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநரான அட்லீ, தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் இயக்கினார். விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. அதேநேரம், ராஜா ராணி முதல் பிகில் வரை அட்லீ இயக்கிய படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. தற்போது அந்த வரிசையில் ஜவானும் சேர்த்துள்ளது. இந்த படம் ஹிந்தியில் மாஸ் படமாக இருந்தாலும் தமிழில் அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸை பெறவில்லை.