தீரா காதல்… கள்ள காதல் படமா.? நல்ல காதல் படமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெய், நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் ரோகித் வெங்கடேஷ் ஆகியோர் படைப்பில் தற்பொழுது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தீரா காதல். இந்த படத்தில் நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் காதலை பிரேக்கப் செய்துவிட்டு பிரிகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஐந்து வயது குழந்தையுடன் வாழ்கிறார். அதேபோன்று மறுபக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் செய்து குழந்தை இல்லாமல் ஒரு கொடுமைப்படுத்தும் கணவருடன், ஒரு கொடூர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட கணவருடன் யாருமே வாழ முடியாது என்கின்ற ஒரு சூழலில் சகித்துக் கொண்டு ஒரு நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெய் இருவரும் வேலை நிமித்தமாக மங்களூர் செல்கிறார்கள். அங்கே சுமார் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் சந்தித்த பின்பு ஒருவர் ஒருவர் நலம் விசாரித்தவர்கள், தங்களுடைய வாழ்க்கையின் பழைய நினைவுகள் மற்றும் தற்போது உள்ள வாழ்க்கை எப்படி போகிறது என்கின்ற அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதன் பின்பு இருவரும் ஒன்றாக மீண்டும் பழகத் தொடங்குகிறார்கள், அப்படி பழகிய சில நாட்களிலேயே மீண்டும் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார்கள். ஆனால் ஜெய் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது என்பதை உணர்ந்து, இனி ஐஸ்வர்யா ராஜேஷ்சை சந்தித்து பேசுவதெல்லாம் சரி இல்லை என்கின்ற முடிவுக்கு வருகிறார்.

அந்த வகையில் இருவரும் இனிமே சந்திக்க வேண்டாம் என முடிவு செய்து மீண்டும் சென்னை சென்றால் அங்கே நாம் சந்திக்க வேண்டாம் என்னும் முடிவு எடுக்கிறார்கள். சென்னைக்கு வந்த பின்பு மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள், அதன் பின்பு நடக்கும் பிரச்சனைகளை சுவாரசியமாக படத்தின் இயக்குனர் நகர்த்தி சென்றுள்ளார்.

இதற்கு முன்பு வெளியான அழகி, ஆட்டோகிராப், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களின் சாயல் இந்த படத்தில் இருந்தாலும் கூட, தீரா காதல் படத்தின் இயக்குனர் கதைகளை சொல்லும் விதம் ஒரு புது விதமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அடுத்தடுத்து என்ன காட்சிகள் வர இருக்கிறது என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு படம் பார்ப்பவர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.

அதாவது ஏற்கனவே காதலித்து பிரிந்தவர்கள் வெவ்வேறுவர்களை திருமணம் செய்த பின்பு மீண்டும் சந்திக்குகிறார்கள், இந்த கதையை மிக சதுர்த்தியமாக இயக்குனர் கையாண்டு உள்ளார், இதில் ஏதாவது ஒரு குளறுபடி ஏற்பட்டிருந்தால் இது கள்ளக்காதல் என்கின்ற ஒரு முத்திரை இந்த படத்தின் மீது விழுந்திருக்கும். ஆனால் அப்படி விழாதளவிற்கு இயக்குனர் மிக திறமையாக திரைக்கதை அமைத்துள்ளார்.

நடிகர் ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் பிரேக் அப் செய்த பின்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறார். இதன் நிலையில் மீண்டும் தன்னுடைய பழைய காதலி ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்த பின்பு ஒரு பக்கம் மனைவி பிள்ளைகள், மறுபக்கம் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த நிலையில் மனைவி குழந்தைகளையும் விட முடியவில்லை, அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையை பார்த்து பரிதாபப்படுகிறார்.

இப்படி ஒரு சூழலில் ஜெய் கதாபாத்திரத்தை மிக அருமையாக நகர்த்தி படத்தின் சுவாரசியம் குறையாமல் நகர்த்தியுள்ளார் இயக்குனர். மேலும் ஜெய்யிடம் பழகிய இடைப்பட்ட காலத்தில் ஜெய்யை விட்டு விலக வேண்டாம் என அவசரப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் சில முடிவுகள் அவரை வில்லி போன்று இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது ஆக மொத்தத்தில் தீரா காதல் படம் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் படி அமைந்துள்ளது.