தள்ளிப்போன சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ்… காதலர் தினத்தில் கலவரம்!

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்தது. அதையடுத்து அவர் நடித்துள்ள டான் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த படத்தில் அவரோடு பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது இரண்டு வாரங்கள் தள்ளி பிப்ரவரி 11 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பிப்ரவரி 3 ஆம் தேதி சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலிஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.