கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுவும் தயாரிப்பாளராக, அந்த வகையில் அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, நதியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன் அவுட் ஆகி விட்டது. தற்போது எல்சியம் படத்தைப் பற்றி சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தோனியை பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த படமானது கலாச்சாரத்தை சீர்குலைக்க கூடியது. பொதுவாக கல்யாணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு சென்று கைநனைப்பர். அதன்பின் நிச்சயதார்த்தம் நடக்கும். பின்னர் கல்யாணம் நடக்கும். இதுதான் நமது பாரம்பரியம். ஆனால் இந்த படத்தின் ஹீரோயின் மாமியாருடன் பழகிப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதெல்லாம் நடைமுறையில் நடந்தால் என்னவாகும். இப்படி எல்லாம் நடந்தால் யாருக்கு தான் கல்யாணம் ஆகும். இது ஒரு கலாச்சார சீர்கேடு. இதில் யாரை குறை சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தின் கதையை எழுதிய தோனியின் மனைவியை தான். இவர் எப்படி இது போன்ற கதையை எழுதினார் என்பதே யூகிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தோனியிடம் கருப்பு பணம் அதிகமாக உள்ளது.
அதனை அவர் வெள்ளையாக மாற்ற வேண்டும். அதற்காக தான் சினிமா துறைக்கே வந்துள்ளார். தேவையில்லாமல் இப்படி ஒரு படத்தையும் தயாரித்துள்ளார். மக்கள் யாரும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்காதீர்கள். அதையும் மீறி நீங்கள் போனால் கண்டிப்பாக தலைவலி வரும். பின் மாத்திரை சாப்பிட வேண்டியதுதான். படத்தில் நன்றாக இருப்பது என்றால் யோகி பாபுவின் காமெடி மட்டும் தான்.
பஸ் கண்டக்டராக சில காட்சிகளில் அவர் வந்தாலும் மக்களை சிரிக்க வைக்கிறார். மேலும் நதியா அதே அழகுடன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்று கூட இல்லை” எனத் தாறு மாறாக படத்தை மட்டும் இன்றி தோனி மற்றும் தோனி மனைவியை பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
சிங்கிள் மதர், மாமியார் – மருமகள் உறவு என வலிமையான கதைக்கரு இருந்தும், அடித்து ஆட முடியாமல் நெட் பிராக்டீஸ் செய்த திருப்தியோடு படத்தை எடுத்து வைத்துள்ளனர். எல்ஜிஎம் தோனியின் தயாரிப்பு என்பதால் டி20 போல இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள், டென்னிஸ் பால் மேட்ச் பார்க்கும் அனுபவத்துடன் மட்டுமே திரும்ப வேண்டியிருக்கும். மொத்தத்தில் LGM ஒரு ரோட் ட்ரிப் லவ் ஸ்டோரி என்பது குறிப்பிடத்தக்கது.