மாநாடு ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… பண்டிகை நாளைக் குறிவைத்த சோனி லிவ்!

0
Follow on Google News

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான மாநாடு திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவடைய செய்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக மாநாடு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் படத்தை திரையுலகினர் அனைவரும் பார்த்து பாராட்டி விட்டனர்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை சமீபகாலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த மற்றும் லாபம் கொடுத்த படமாக மாநாடு அமைந்துள்ளது. இதையடுத்து இந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த படத்தை சோனி லிவ் ஓடிடி தளம் 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியாகலாம் என்பதால் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாம்.