சினிமாவில் காமெடி நடிகராக டாப்பில் இருந்து வந்த நடிகர் சூரி, தற்பொழுது அவருடைய மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதற்கு முன்பு சினிமாவில் சம்பாரித்த பணத்தில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மன் உணவகம், அம்மன் காபி பார், அம்மன் டிபன் சென்டர் என பல கிளைகளை திறந்து பெரும் லாபத்தை ஓட்டல் தொழில் மூலம் சம்பாரித்து வருகிறார் நடிகர் சூரி.
இந்நிலையில் சமீபத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சாப்பாடு கேண்டீனை டெண்டர் எடுத்துள்ளார் நடிகர் சூரி. இவர் டெண்டர் எடுத்த போதே பெரும் சர்ச்சை வெடித்தது, வெளிப்படையாக டெண்டர் விடாமல் நேரடியாக நடிகர் சூரி தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த கேண்டீனை எடுத்துள்ளார் என்று சர்ச்சை வெடித்த போது, மிக குறைந்த விலையில் இங்கு வரும் ஏழைகளுக்கு உணவு வழங்கி சேவை செய்யவே எந்த உணவகம் திறக்கப்பட்டதாக சூரி தரப்பு தெரிவித்தது.
ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள சூரிக்கு சொந்தமான அம்மன் மருத்துவமனையில், ஏழைகள் வயிற்றில் அடிப்பது போன்று கொள்ளை லாபத்துக்கு உணவு விற்கப்பட்டு வருவது அங்கே வரும் ஏழைகளை வருத்தமடைய செய்துள்ளது. குறைந்த விலைக்கு உணவு தருவதாக கூறிக்கொண்டு, மிக சிறிய அளவு பஜ்ஜி, வடை அதிக விலைக்கு விற்கப்படுகிறது, இது போன்று டீ, காபி, சாப்பாடு என ஏழைகளின் வயிற்றில் அடித்து சம்பாரித்து வருகிறார் நடிகர் சூரி.
தனியார் மருத்துவமனைக்கு செல்ல பணமில்லாமல் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகள் அங்கே வேறு உணவகம் இல்லாமல் சூரி கடையில் அதிக விலை கொடுத்து குறைத்த அளவு உணவை வாங்கி சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக மாநில இளைஞரணி செயலாளர் Dr. சங்கர் பாண்டி, மதுரை மாவட்ட ஆட்சி தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு ஓன்று கொடுத்துள்ளார், அந்த மனுவில் அவர் குறிப்பிட்டதாவது,
தனியார் சுய லாபத்துக்காக அரசு இடத்தை கொடுக்காமல், ஏழை பெண்கள் நடத்தும் மகளிர் சுய உதவி கொடுக்க வேண்டும் என்றும் மேலும் இது தொடர்பாக Dr.சங்கர் பாண்டி அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் சேவை பிரிவு என்ற உணவகத்தை தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்.
அப்போது ஊடகத்துக்கு இந்த கடையை பற்றி சொல்லும்போது, குறைந்த விலையில் தரமான உணவை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் அவரின் உறவினர்களுக்கும் வழங்குவார்கள், அதற்காக இந்த கடையை நான் திறந்து வைத்துள்ளேன், என்று ஊடகத்திற்கு சொன்னார். ஆனால் கடை திறந்து தற்போது மூன்று வாரத்திற்கு மேல் ஆகப்போகிறது, ஆனால் அமைச்சர் சொல்லியது போல் நடிகர் சூரி செய்யவில்லை,
அதற்கு மாறாக, அவர் விலையை சிறுதுளி மட்டும் குறைத்து விட்டு உணவின் அளவை குறைத்து விற்று வருகிறார். அவர் நடத்தும் வெளிக் கடைகளை விட இங்கு உணவின் அளவு மிகவும் குறைவாக உள்ளது, இது ஏழைகளை ஏமாற்றும் செயலாகும், இது எப்படி சேவையாகும், சூரி அமைச்சரை மட்டும் ஏமாற்றவில்லை, அங்கு வரும் ஏழைகளையும் ஏமாற்றி அவர்களின் வயிற்றில் அடித்து பிழைக்கும் நிலைக்கு சூரி வந்ததன் காரணம் என்ன? என Dr.சங்கர் பாண்டி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.