எஸ்பி பாலா செய்த மிக பெரிய உதவி…. ஆனால் கொஞ்சம் கூட நன்றி விஸ்வாசம் இல்லாமல் நடந்து கொண்ட அஜித்…

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் தன்னுடைய நண்பன் வெற்றி துரைசாமி மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், நண்பரை இழந்து சோகத்தில் இருக்கும் அஜித்துக்கு மக்கள் ஆறுதல் தெரிவித்து வரும் அதே நேரத்தில், அவர் மீதான கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் அதி முக்கியமானவராக திகழ்ந்த விஜயகாந்த் மறைவுக்கு இதுவரை இரண்டு வரியில் இரங்கல் கூட தெரிவிக்காத அஜித்தின் நடவடிக்கைள் குறித்து கடுமையாக அஜித்தை மக்கள் விமர்சனம் செய்தாலும் கூட இது குறித்து கொஞ்சம் கூட அஜித் கவலை படப்போவதில்லை என்பது போன்று, என்னைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் நான் படம் நடிக்கிறேன் ஏன் படத்திற்கான வியாபாரம் இருக்கு என, தனக்கு எதிராக வரும் மக்களின் கோபக் குரலை அஜித் காதில் வாங்குவதாக தெரியவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அப்படி மக்களின் மனநிலையை அஜித் புரிந்து கொண்டிருந்தால் அந்த மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தற்பொழுது கூட விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருப்பார் அஜித். விஜயகாந்துக்கு மறைவுக்கு மட்டுமா அஜித் போகவில்லை, பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன், மயில்சாமி மனோபாலா என அஜித்துக்கு நெருக்கமானவர்கள் பலர் மறைவுக்கு அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதில் குறிப்பாக எஸ் பி பாலசுப்பிரமணியன் இல்லையென்றால் அஜித் இன்று தமிழ் சினிமாவிலேயே இல்லை என்கின்ற வரலாறு பலருக்கு தெரியாது.

அமராவதி படத்தின் இயக்குனர் செல்வா அந்த படத்தை தொடங்கிவிட்டார், ஆனால் அந்த படத்தின் கமிட் செய்யப்பட்ட நடிகர் முறையாக ஒத்துழைக்கவில்லை, இதனை தொடர்ந்து எஸ்பி பாலாவிடம் செல்வா தான் எடுக்க போகும் அமராவதி படத்திற்கு சிகப்பாக அழகான ஒரு பையன் வேண்டும் என கேட்கிறார், அதற்கு எஸ் பி பாலா தெலுங்கு சினிமாவில் ஒரு பையன் நடித்து வருகிறான், அவன் சென்னை மந்தவெளியில் தான் இருக்கிறான் என அஜித்தை கை காட்டுகிறார்.

அப்போது அஜித்துக்கு தமிழ் கூட சரியா தெரியவில்லை இருந்தும் எஸ்பிபி கைகாட்டிய அஜித்தை இயக்குனர் செல்வா அமராவதி படத்தில் கமிட் செய்கிறார். அப்படித்தான் அஜித் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆகிறார் அஜித். அதன் பின்பு அஜித்தின் சினிமாவின் அசுர வளர்ச்சியை அனைவரும் தெரிந்தது. அப்படி அஜித்துக்கு மிகப்பெரிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த எஸ்பிபி மறைவுக்கு கூட அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.

ஒருவேளை எஸ் பி பி மறைந்த போது கொரோனா பரவல் காரணமாக அஜித் நேரில் செல்லவில்லை என்றாலும் கூட ஒரு இரண்டு வரியில் இரங்கல் தெரிவித்து இருக்கலாம், அல்லது அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து இருக்கலாம், ஆனால் ஒரு விசித்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அஜித் இதுவரை எஸ் பி பிக்கு எந்த ஒரு இரங்களும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில் நடிகர் அஜித் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் ஒட்டுமொத்த மக்களும் உங்களை கொண்டாடிக் கொண்டிருக்கையில், ஒன்று கூடி ஒரே நேரத்தில் அந்த மக்கள் உங்களை வெறுத்தால் ஓவர் நைட்டில் நீங்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள் என்பதை அவர்கள் அருகில் இருக்கிறவர்கள் அவருக்கு உணர்த்தி, மக்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்வதுதான் பொது வாழ்க்கை,

அந்த வகையில் அரசியலும் சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை சார்ந்தது, அந்த மக்கள் நினைத்தால் உங்களை தலையில் வைத்து கொண்டாடுவார்கள் மக்கள் கோபப்பட்டால் உங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள் என்பதை அஜித்துக்கு அவர் கூட இருக்கிறவர்கள் அறிவுறுத்த வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

அஜித் ஒருவேளை அவர் ஏ கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து அனைவரையும் மேலே இருந்து கீழே பார்ப்பது போன்று தான் உள்ளது அவருடைய நடவடிக்கைகள் உள்ளது என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. இதுவரை தமிழக மக்கள் அஜித்தை தலையில் வைத்து கொண்டாடி வந்த நிலையில் இல்லை நான் இப்படித்தான் இருப்பேன் என்றால் மக்கள் யார் என்று காட்டும் நேரம் அஜித்துக்கு நெருங்கி விட்டது என்பதை உணர்த்தும் காலம் நெருக்கி விட்டது என பலரும் அஜித்தை எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.