ஏற்கனவே வாங்கிய அடி கண் முன்னே வந்து போகும்ல… உள்ளே செல்லாமல் பாதியிலே திரும்பிய விஜய்…

0
Follow on Google News

கடந்த டிசம்பர் மாதம் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு கையில் மாலையுடன் வந்த விஜய், அங்கே இருந்த கடும் கூட்ட நெரிசலில் சிக்கி விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தார்.ஒரு வழியாக காவல்த்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் விஜயகாந்த் உடலுக்கு கண்கலங்கி அஞ்சலி செலுத்திய விஜய்.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் அங்கிருந்து புறப்படும் போது, கூட்டத்தில் இருந்து விஜய் இருந்த இடத்தை நோக்கி செருப்பு பறந்து வந்ததது. மேலும் விஜய் கன்னத்தில் மர்ம நபர் ஒருவர் குத்துவது போன்று வீடியோ ஒன்று வைரலானது. மேலும் கூட்டத்தில் இருந்த ஒரு சிலர், விஜய்யை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இருந்தும் கூட்ட நெரிசலில் இருந்து விஜய் பத்திரமாக மீட்டு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது, அரசியல் தலைவர்கள், சினிமா துறையை சேர்ந்த முக்கிய நடிகர்கள் நேரில் சென்று வெற்றி துறை சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள், இந்நிலையில் நடிகர் விஜயும் வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த இல்லத்திற்கு வந்துள்ளார்.

ஆனால் அங்கே பெரும் கூட்டம் இருந்ததால், வெற்றி துரைசாமி உடல் வைக்கப்பட்டிருந்த அவருடைய வீட்டில் சிறிது தொலைவில் இருந்த விஜய், ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு மேல் அவரால் செல்ல முடியவில்லை, மேலும் வெற்றி துரைசாமியின் இல்லம் செல்லும் வழி மிக குறுகிய சாலை என்பதால் கூட்ட நெரிசலை சரி செய்வதும் சிரமம், இந்நிலையில் ஏற்கனவே விஜயகாந்த் உடலுக்கு கூட்ட நெரிசலில் சிக்கி அஞ்சலி செலுத்த சென்ற விஜய்க்கு கன்னத்தில் மர்ம நபர் கொடுத்த அடி, மற்றும் விஜய்யை நோக்கி வந்த செருப்பு வீச்சு இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு.

மேலும் தற்பொழுது அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், இந்த கூட்ட நெரிசலில் வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி, ஏற்கனவே விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது நடந்த சம்பவம் போல் நடந்து விட கூடாது, அதனால் விஜய் உடன் வந்தவர்களை, இதற்கு மேல் பாதுகாப்பு கருதி போக வேண்டாம் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்தாமல் பாதியிலே திரும்பி சென்ற விஜய், தன் சார்பாக புஸ்ஸி ஆனந்தை வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுப்பி வைத்துள்ளார். இதன் பின்பு வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய புஸ்ஸி ஆனந்த், வெற்றி துரைசாமி தந்தை சைதை துரைசாமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தவர், விஜய் அஞ்சலி செலுத்த வந்த விஷயத்தையும், ஆனால் கடும் கூட்ட நெரிசல் காரணமாக திரும்பி சென்றதையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசியலில் குதித்துள்ள விஜய், இன்னும் பல பிரமாண்ட கூட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும், அப்படி இருக்கையில் இந்த கூட்டத்தை பார்த்து வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர் திரும்பி போனால், இன்னும் மாநாடு, பொது கூட்டம் என தமிழகம் முழுவதும் சென்று எப்படி பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அரசியல் செய்ய போகிறார் விஜய் என்கிற கேள்வியும், அதே நேரத்தில் கூட்டத்தை பார்த்து பயந்தால் விஜய்க்கு அரசியல் செட் ஆகாது என பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடதக்கது.