அஜித்தை கண்டு கொள்ளாத அன்புசெழியன்… சிவகார்த்திகேயன் மேடையில் நடந்த புறக்கணிப்பு..!

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் மற்றும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் இடையேஇருந்து வரும் முன்பகை இன்று வரை நீடித்து வருகிறது. பாலா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் நடிகர் அஜித். இந்த படத்தில் நடிப்பதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் போட்டோ ஷூட் என அனைத்திலும் கலந்து கொண்ட அஜித் குமார் பின்பு இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் கடவுள் படத்தில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து நான் கடவுள் படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புசெழியனிடன் இந்த பஞ்சாயத்து சென்றுள்ளது. அப்பொழுது சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் அஜித்தை வரவழைத்து அன்பு செழியன் தலைமையில் பாலா மற்றும் அன்புசெழியன் ஆட்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்துள்ளது. இதில் நடிகர் அஜித் மிக கடுமையாக மிரட்டபட்டதாக கூறப்படுகிறது.

இருந்தும் எந்த ஒரு மிரட்டலுக்கும் பயப்படாமல் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருகிறேன், ஆனால் நான் கடவுள் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்ற அஜித் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்தை அவமானப்படுத்தும் விதத்தில் அன்புசெழியன் நடந்து கொண்டுள்ளார், இருந்தும் அஜித் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அன்புசெழியன் பேசுகையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய் ஆகியோர் வரிசையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் இருக்கிறார் என தெரிவித்து, அஜித் பெயரை குறிப்பிடாமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார் அன்புசெழியன், இன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் அளவுக்கு செல்வாக்கு மிக்க நடிகராக அஜித் வலம் வந்து கொண்டிருக்கார்.

அப்படி இருக்கையில், அஜித் பெயரை மேடையில் குறிப்பிடாமல் அன்புச் செல்வன் புறக்கணித்ததற்கு முக்கிய காரணம் நான் கடவுள் படத்தில் நடந்த பழைய பஞ்சாயத்து தான் என்று கூறப்படுகிறது . மேலும் தற்போது ரஜினி, விஜய் அடுத்ததாக மூன்றாவது நடிகராக சிவகார்த்திகேயன் இருப்பது போன்ற ஒரு கட்டமைப்பு சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இதனால் தொடர்ந்து பல நிகழ்வுகளில் அஜித் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வரப்படுகிறார். இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியனும் பேசுகையில் சிவகார்த்திகேயனை மூன்றாவது நடிகர் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியிருந்தார். அதேபோன்று பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் பேசுகையில், ரஜினி விஜய் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல தனியார் தொலைக்காட்சிகள் சிவகார்த்திகேயனை ஒரு மூன்றாவது நடிகராக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் அஜித்தை யார் இருட்டடிப்பு செய்தாலும் அவருக்கான ரசிகர் பட்டாளம் அவர் பின்னால் இருந்து வருவதால் அஜித் என்ற நடிகரை எந்த ஒரு கட்டமைப்பு தகர்த்து விட முடியாது, புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதையாக தான் சிவகார்த்திகேயன் நிலைமை என்கின்றனர் சினிமா துறையினர்.