நித்யாமேனன் எங்கே.? வலைவீசி தேடும் தமிழ் சினிமா இயக்குனர்கள்… எங்கே இருக்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நித்யா மேனன் மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சதிரமாக அறிமுகமாகி, பிஸி நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பட வாய்ப்புகள் பெருமளவு குவிந்து வருகின்றனர். தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த நித்யா மேனன் காஞ்சனா 2 படத்தில் தன்னுடைய அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் 24 மற்றும் விஜய் நடிப்பில் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன் பின்பு சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தில் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் நித்யா மேனன். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்து நித்யா மேனனின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது.

நயன்தாரா தற்பொழுது திருமணம் முடிந்து குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ள நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதற்கான தமிழ் சினிமா வாய்ப்புகள் நித்யா மேனனுக்கு குவிந்து வருகிறது. அது மட்டுமின்றி திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின்பு பல படவாய்ப்புகள் நிதிமேனனுக்கு வருகிறது. ஆனால் நித்தியா மேனனை தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

நித்யாமேனன் மேனேஜர்கள் யாரையும் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய கால்ஷீட் மற்றும் சம்பள விவகாரங்களை பேசுவது குறித்து மும்பை ஏஜென்சி நிறுவனத்தை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இயக்குனர்கள் பலர் நித்யாமேனனை சந்தித்து கதை சொல்லவும், கால் சீட் வாங்கவும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒருவரை மேனேஜராக தனக்கு நியமித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் நித்யாமேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!