வெளியானது மாநாடு படத்தின் சென்ஸார் அப்டேட்

0
Follow on Google News

மாநாடு படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி இப்போது நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. டைம் லூப் என சயின்ஸ் பிக்ஷன் கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. சிம்புவும் ஒரு வெற்றிப்படம் கொடுத்து நீண்ட ஆண்டுகள் ஆவதால் அவரும் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கும் விதமாக நேற்று மாலை இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியானது. இதையடுத்து படத்தை சென்சாருக்கு படக்குழுவினர் அனுப்பினர். அங்கு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.