கமலஹாசனை கேவலமாக பேசிய பூர்ணிமா… அவமானம் தாங்காமல் செம்ம டோஸ் விட்ட கமல்ஹாசன்…

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, ஐஷு, ஜோவிகா ஆகியோர் புல்லியிங் கேங் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் ஐஷு கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த கேங் 3 ஆக குறைந்தது. இந்த நிலையில் புல்லியிங் கேங்கின் அட்ராசிட்டியை கவனித்து வந்த கமல் கடந்த வாரம் பூர்ணிமாவை வச்சி செய்துவிட்டார்.

இந்நிலையில் ஒரு வீடியோவில் பூர்ணிமா கமலை தவறாக விமர்த்துள்ளார். விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசும் போது, கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து பூர்ணிமா பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் போது கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறியுள்ளார்.

இது சம்பந்தமான ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதலிலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார். ஆனால், தற்போது அது கமலுக்கு நடந்துள்ளது. இதை கவனித்த ரசிகர்கள், அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாயா – பூர்ணிமா கேங்குக்கு அவர் ஆதரவாக பேசுகிறார் என சமூக வலைதளங்களில் கமலை நெட்டிசங்கள் வறுத்தெடுத்த நிலையில் முதல் முறையாக பூர்ணிமா மீது கோபமாக பேசி இருக்கிறார் கமல். பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் விதி மீறல்கள் குறித்தும் தன்னை பற்றி உள்ளே பூர்ணிமா பேசி வருவது குறித்தும் கமல்ஹாசன் பேசி இருப்பது தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயாவை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். உள்ளே யார் விமர்சனத்தை தாங்கி கொள்ளாதவராக இருக்கிறார் என்று கமல்ஹாசன் கேட்டிருந்தார். அப்படியே பேசிக் கொண்டிருக்கும்போது இப்போது எனக்கும் விமர்சனங்கள் வருகிறது. நான் விமர்சனங்களை தாண்டி தான் வந்து கொண்டிருக்கிறேன்.

நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். கலைஞனை தாக்கி அவர்களை அழித்து விட வேண்டும் என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளக்கம் கொடுத்து இருந்தார். அதோடு இங்க யாரும் என்னை இதைக் கேட்க வேண்டும் அதைக் கேட்க வேண்டும் என்று சொல்ல முடியாது. கேட்கவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க? நீங்களும் இங்கே சம்பளம் வாங்குறீங்க, நானும் சம்பளம் வாங்குறேன்.

அதனால மரியாதை கொடுங்க. யாரும் இங்கு எனக்கு ஃபேவரைட் கிடையாது. நீங்க நான் என்ன சொல்லணும்னு எனக்கு டயலாக் எழுதி கொடுக்காதீங்க. டயலாக் எழுதுவதில் எனக்கு அனுபவம் இருக்கு, ஆனா உங்களுக்கு யாருக்கும் உள்ளே அனுபவம் இருக்குதா? என்று கேட்டு அதோடு நான் இல்லாமல் ஒரு கண்டன்ட் உங்களால கிரியேட் பண்ண முடியுதான்னு முதல்ல பாருங்க. உங்க கேம்ல உங்களோட பார்ட்னர் நான் இல்ல, நான் ஆங்கர்.

உங்க கன்டண்டுக்கு வாக்கிங் ஸ்டிக்கா நான் இருக்க மாட்டேன் என கோபத்தில் கமல்ஹாசன் பேசி கொண்டிருந்தபோது கேமரா பூர்ணிமா மற்றும் மாயாவின் சோக முகத்தை குளோசபை காட்டிக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் பேசி முடித்த பிறகு வெளியே வந்த பூர்ணிமா மாயாவிடம் ஏன் இவ்வளவு வெறுப்பு என்று கதறி அழுது கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் இதற்கு முன்பு பூர்ணிமா மீது பல தவறு இருந்தும் தட்டி கேட்காத கமல் தன்னை பற்றி குடி கார அங்கிள் என பேசியதும் பொங்கி எழுந்துள்ளார், அந்த வகையில் கமலுக்கு வந்தா ரத்தம் மத்தவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.