பிரபல பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம்: திரையுலகில் சோகம்

0
Follow on Google News

கடந்த 2014-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துனியா’ படம் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த் சுக்லா. படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு பல்வேறு இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசனில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தி சினிமா உலகில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். இதையடுத்து, வெப் தொடர்களிலும், படங்களிலும் நடித்து வந்த சுக்லாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். சித்தார்த் சுக்லாவுக்கு வயது 40.

சுக்லாவின் திடீர் மரணம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுக்லாவின் மறைவுக்கு ரசிகர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை சமூகவலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.