பிக் பாஸ் கொண்டாட்டத்தை புறக்கணித்த அர்ச்ன்னா… காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்தது. அதில் போட்டியின் நடுவில் ‘வைல்ட் கார்ட்’ என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா ‘பிக் பாஸ்’ பட்டத்தை வென்றார். வெற்றியாளருக்கான கோப்பையை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் வழங்கினார். ’வைல்ட் கார்ட்’ என்ட்ரியில் உள்ளே வந்த போட்டியாளர் ஒருவர் தமிழ் பிக் பாஸ் சீசனில் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை.

போட்டியில் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதவிர, 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. ‘வைல்ட் கார்ட்’ போட்டியாளர் அர்ச்சனா, முதல் வாரத்தில் பெரும்பாலும் அழுதுகொண்டே இருப்பதாக, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் கேலி செய்ததால், தன்னை சக போட்டியாளர்கள் ‘புல்லி’ செய்வதாக அர்ச்சனா குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால், மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுக்கு ‘புல்லி கேங்க்’ என்ற பெயரே சமூக ஊடகங்களில் வைரலானது.

அர்ச்சனாவுக்கு ஆதரவாக விசித்ரா துணைநின்றார். இருப்பினும் மாயா, பூர்ணிமாவை எதிர்த்து, தொடர்ந்து இவருடைய செயல் ரசிகர்களை கவர துவங்கிய நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். ஆரம்பத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக பேசினார் அர்ச்சனா. பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ந்து பேசினார்.

வார இறுதியில் மாயா, பூர்ணிமா தரப்புக்கு கமலிடமிருந்து விமர்சனங்கள் வர, மறுபுறம் அர்ச்சனாவுக்கு ஆதரவு எழுந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அர்ச்சனாவின் நடவடிக்கைகளையும் கமல் விமர்சித்தார். இருப்பினும் அவருக்கான ஆதரவு தொடர்ந்து வந்தது. விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 28வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக தான் விஜே அர்ச்சனா உள்ளே வந்தார். அதன்படி 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

பரிசு தொகை ரூ. 50 லட்சம், பிளாட் மற்றும் கார் மதிப்பு ரூ. 30 லட்சம், சம்பளம் ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் என ஆக மொத்தம் ரூ. 95 லட்சத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார் அர்ச்சனா. அதே நேரம் அவருக்கு டைட்டிலை வெல்லும் தகுதி இல்லை. இது அநியாயமான வெற்றி. பக்கா பி.ஆர். டீம் இருந்தால் டைட்டிலை வெல்லலாம். பிக் பாஸ் என்பது கேம் ஷோ இல்லை வியாபாரம் என நிரூபித்துவிட்டார் அர்ச்சனா என அவரை பலரும் சமூக வலைதளங்களில் விளாசினார்கள்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த ரூ. 15 லட்சத்துக்கு 40 ஆயிரம் கிடைத்ததை அதை அப்படியே பி ஆர் ஏஜென்சிக்கு சம்பளமாக கொடுத்து விட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இந்நிலையில் பிக் பாஸ் டைட்டின் வென்ற அர்ச்சனா முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார். அதில், “பலர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற பிறகும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. பிக் பாஸ் டைட்டில் எனக்கு கொடுத்தாலும் அங்கே சில பிரச்சனைகள் நடந்தது.

அது என்னவென்று எனக்கே புரியவில்லை. அந்த நேரத்தில் என்னுடைய பெற்றோர் நீ அதில் கவனத்தை செலுத்தாதே என்று சொல்லிவிட்டார்கள். உள்ளிருக்கும் சிலர் சொன்ன வார்த்தைகள் எனக்கு எதுவும் புரியவில்லை. காரணம் அங்கு பாடல் சத்தமாக ஒழிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அதனால் சிலர் பேசுவதே என்னால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் இருந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அங்கே பிக் பாஸ் கொண்டாட்டமும் நடைபெற்றது. அதில் என்னுடைய பெற்றோர் கலந்து கொள்ள வேண்டாம், நாங்கள் நிகழ்ச்சியை பற்றி காட்டுவதை மட்டும் நீ பார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். நான் முதல் முதலாக உள்ளே சென்று ஆச்சிரியப்பட்ட நபர் என்றால் அது அவர் தான். ஏனென்றால் அவரிடன் நாம் எதாவதது பேசினால் உடனே அம்பு போன்று ஒரு பதில் கிடைக்கும். அதற்கு பிறகு ஒரு நல்ல பழக்கம் அவருடன் வந்தது. என் உடைகளை பல முறை ஹீட் செய்து கொடுத்து இருக்கிறார். அது எல்லாம் மறக்கவே மாட்டேன் என நான் சொல்லி கொண்டே இருந்தேன். எப்போதும் எதாவதது யோசித்து கொண்டே இருப்பார். உன்னை எல்லாரும் பேசி அடுத்த வாரம் எப்படி அனுப்ப போகிறோம் பாரு என சொல்லுவார் “ என்றார்.