உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆண்டு தோறும் மே 28-ஆம் தேதி ‘உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் உத்தரவுபடி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் மே 28 அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜய்யின் உத்தரவின் படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று பட்டினி தினம் அன்று விஜய் தமிழகம் முழுவது குறிப்பாக 234 தொகுதி என குறிப்பிட்டு உணவு வழங்குவது இதன் பின்னனியில் அவருடைய அரசியல் கணக்கு வெட்டம் வெளிச்சமாகி உள்ளது.
தமிழகத்தில் பட்டினி என்கின்ற ஒரு நிலை இருக்கிறது என்றால், அந்த நிலை எல்லாம் மக்கள் எப்போது கடந்து வந்து விட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு தான், தமிழ்நாடு மக்களின் இன்றைய நிலையில் இருந்து வருகிறார்கள், குறிப்பாக ஏழை மக்களுக்கு அரசாங்கம் மாதம் 20 கிலோ அரிசி என ரேஷன் கடை மூலம் தருகிறது, மேலும் அரிசி பருப்பு என மலிவு விலையில் அரசாங்கம் கொடுத்து வருகிறது .
அதே போன்று தமிழகத்தில் உள்ள விஜய் குறிப்பிட்ட அந்த 234 தொகுதிகளில், பெரும்பாலான கோயில்களின் தினந்தோறும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த அன்னதானத்தில் பல ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோன்று அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் வழங்கி வந்த அரசாங்கம், தற்போது காலை உணவும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தமாட்டில் பசியை போக்குகின்ற திட்டத்தை அரசாங்கம் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் பட்டினி தினத்தன்று பட்டினியால் வாழும் மக்களுக்கு ஒரு வேலை உணவளிப்பதின் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி அரசியலை கொண்டு வந்து விடலாம் என்கின்ற அவருடைய எண்ணமே தவறானது.
உணவு என்கின்ற ஒரு விஷயம் தாராளமாக அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் 234 தொகுதிக்கும் ஒரு தொகையை செலவு செய்து பட்டினி தினத்தன்று உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனால் தன்னுடைய அரசியல் எழுச்சி பெருமா.? என்றால் நிச்சயம் கிடையாது என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மேலும் இந்த பணத்தை வேறு ஒரு வகையில் குறிப்பாக ஏழை எளிய மாணவர்களின் கல்வி சார்ந்து ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும் விஜய். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த தலைமுறையை விஜய் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே அவருடைய அரசியல் எந்த நோக்கத்திற்கு வந்தாரோ.? அதை அவரால் அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை விட்டுவிட்டு சோறு போடுகிறேன், சாம்பார் ஊத்துகிறேன் என்பதெல்லாம் விஜய் அரசியலுக்கு கதைக்காகாது என விஜய்க்கு பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், நான் பட்டினியில் கிடைக்கும் மக்களுக்கு சோறு போடுகிறேன், கஞ்சி ஊத்துகிறேன் என்கின்ற விஜயின் செயல்பாடுகள் இன்று அரசியல் களத்தில் நகைச்சுவையாக தான் பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பொழுதே ஒரு செயலை செய்யும் போது அட….டா… நமக்கான தலைவன் வந்து விட்டான் என்று மக்கள் வியப்புடன் பார்த்து வரவேற்க வேண்டும். அப்படி ஒரு செயலை செய்யாமல், நான் சோறு போடுகிறேன், இலவச வேஷ்டி, சட்டை தருகிறேன் என்பது அவருடைய அரசியலுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. மேலும் மக்கள் மனநிலை அறிந்து விஜய்க்கு சரியான முறையில் ஐடியா கொடுக்கும் நபரை அருகில் விஜய் வைத்து கொள்ள வேண்டும், அதை விட்டுவிட்டு, டம்மி ஐடியா கொடுத்து விஜய்யை டம்மியாக்கும் ஐடியாக்களை ஏற்றுக்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக விஜய் செயல்பட வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடதக்கது.