சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.
முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், ஏ.ஆர்.ரகுமானையும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார்.
அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சத்தமே இல்லாமல் சமூக வலைத்தளத்தில் இளையராஜாவின் காணொளி ஒன்று பரவி வருகிறது. அதில் சில ஆண்டுகளுக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் நேரடியாக வந்த ரசிகர்கள் சிலரை அவர் விமர்சித்தார் இளையராஜா . அதாவது, ‘ரூ.500 டிக்கெட் வாங்கி கொண்டு ரூ.10 ஆயிரம் வாங்கியவர்கள் வரிசையில் வந்து அமர்ந்து இருக்கிறீர்கள். இப்படியென்றால் 10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் எங்கே போவார்கள். இது என் மீதான அன்பு தான் என புரிகிறது. அதுக்காக இப்படியா பண்ணுறது. என்னைத்தானே திட்டுவார்கள்’ என தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி இதுவரை இளையராஜா நடத்திய எந்த கச்சேரிகளிலும் எதுவுமே பிரச்னை ஏற்பட்டது இல்லை. ஏனெனில், அவர் நிகழ்ச்சி பேச்சு வார்த்தை நடக்கும் முன்னரே ரசிகர்களை எப்படி உட்கார வைக்க வேண்டும். எதை செய்யவே கூடாது? என பல கண்டிஷன்களை போட்டு விடுவாராம். நிகழ்ச்சி நடக்கும் போது எதுவும் பிரச்னை எனக் காதுக்கு வந்தால் அந்த நிமிடமே நிறுத்தியும் விடுவாராம்.
காசு கொடுத்து அவங்க நிம்மதியா பார்க்க வேண்டாமா என கடிந்து கொள்வாராம். இதனைத் தொடர்ந்து அடிக்கடி பேசியே சர்ச்சையில் சிக்கும் ராஜா எப்பையுமே ரசிகர்கள் விஷயத்தில் தங்கமுங்க எனப் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடம் இருந்து எப்படி கச்சேரியை நடத்த வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
அனிருத் கூட வருடத்திற்கு நான்கு, ஐந்து இசை கச்சேரிகளை நடத்துகிறார். ஆனால் ஒரு முறை கூட இது போன்ற சம்பவம் நடந்ததே கிடையாது. என்றும் ஏ ஆர் ரகுமானை பலர் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். இதுவரை எந்த இசை நிகழ்ச்சியிலும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது கிடையாது. அந்த அளவுக்கு ஏ ஆர் ரகுமானின் இசை மழையில் நனைய சென்ற ரசிகர்கள் கடும் அவதிப்பட்டு இருக்கின்றனர்.