ஏ ஆர் ரகுமான் தன்னுடைய 13 வயதில் தந்தையை இழந்து, தன்னுடைய 13 வயதில் இருந்து ஒவ்வொரு இசை அமைப்பாளரின் இசை குழுவில் இடம் பெற்று ஒரு குழந்தை தொழிலார் போன்று தன்னுடைய வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து இசை அமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலே தேசிய விருந்து, இதுவரை இந்தியாவில் யாரும் வாங்கமுடியாத ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்ட் என இசையில் உச்சியில் உள்ளார் ஏ ஆர் ரகுமான்.
இந்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக அவரும் அவருடைய மனைவியும் பிரிவதாக அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் ஏ ஆர் ரகுமானை அவரின் இசை குழுவில் கித்தார் வசிக்கும் பெண்ணுடன் தொடர்பு படுத்தி வாய்க்கு வந்த படி பலரும் பேசி வரும் நிலையில் ஏ ஆர் ரகுமான் குறித்து இதுவரை யாருக்குமே தெரியாத பல சம்பவங்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்து நீங்கள் நிச்சயம் மனம் உருகி இப்படி ஒரு மனிதனா.? என்று கண் கலங்குவீர்கள்.
ஒரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு லைக் மேன் மேலே இருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறார், அது ஏ ஆர் ரகுமான் ஸ்டூடியோ சம்பந்தப்பட்ட இடத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது. இதனால் பல நாட்கள் தூக்கம் இன்றி மன அழுத்தத்தால் தவித்த ஏ ஆர் ரகுமான். அந்த இறந்த லைக் மேன் குடும்பத்தை யார் பார்ப்பார் என்று சிந்தனையில் இருந்திருக்கிறார். காரணம் ஏ ஆர் ரகுமான் 13 வயதில் தன்னுடைய தந்தையை இழந்து மிக கடுமையான பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு வளர்ந்தவர் ஏ ஆர் ரகுமான்.
பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாமல் கூட பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் ஏ ஆர் ரகுமான். அந்த அளவிற்கு ஏ ஆர் ரகுமான் தந்தை இறந்த பின்பு மிக பெரிய அளவில் அவருடைய வாழ்க்கை போராட்டமாகவே இருந்தது. இப்படி ஒரு தந்தையை இழந்த குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்று தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை நினைத்து ஒரு லைக்மென்ட் மேலிருந்து கீழே விழுந்து விட்டார்.
அவருடைய குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, அதனால் உடனே அந்த லைட்மென்ட் குடும்பத்திற்கு மட்டும் உதவி செய்யாமல் ஏ ஆர் ரகுமான் ஒட்டு வந்த லைட் மேன் சங்கத்துக்கே நிதி திரட்ட வேண்டும் என்று லைப் மேன்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி அந்த இசை நிகழ்ச்சியில் ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் அதன் நிகழ்ச்சியில் மிகப்பெரிய நிதியை திரட்டி அந்த நிதியை லைட்டு மென் சங்கத்திற்கு கொடுத்தார் ஏ ஆர் ரகுமான்.
இதனால் பல கோடி லைட் மேன் சங்கம் டெபாசிட் செய்யப்பட்டது. சங்கத்தில் இருப்பவர்கள் அங்கே பணிபுரியும் ஊழியர்கள் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த நிதியில் இருந்து அவர்கள் குடும்பத்தை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் ஏ ஆர் ரகுமான் இப்படி ஒரு செயலை செய்தார். அதேபோன்று சுனாமியால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு, அந்த துயரத்தில் இருந்து மீளாமல் தவித்துக் கொண்டிருக்கையில்,
அவர்களுக்கு என்ன கவுன்சிலிங் கொடுத்தாலும் அவர்களால் தங்கள் கண் முன்னே நடந்த அந்த துயரத்தில் இருந்து மீள முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அந்த கடலோர பகுதி மக்களுக்காக ஒரு இலவச இசை நிகழ்ச்சியை நடத்தி அவர்களை மகிழ்வித்து இயல்பு நிலைக்குத் திரும்பியவர் ஏ ஆர் ரகுமான். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பல அறக்கட்டளைகளுக்கு பல கோடிகள் ஏ ஆர் ரகுமான் உதவி செய்திருக்கிறார்.
இப்படி பல உதவிகளை விளம்பரப்படுத்தாமல் சத்தமே இல்லாமல் செய்து வரும் ஏ ஆர் ரகுமான் குறித்து அவதூறு பரப்பினால் அவர்கள் நாக்கு அழுகிவிடும் என்கின்றனர் ரகுமானால் பலனடைந்த பலரும். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.