நீ தான் யோக்கியனாச்சே… சினிமா பிரபலம் கேட்ட கேள்வி…. வசமாக சிக்கிய சிவகுமார் உறவினர்..

0
Follow on Google News

கார்த்தியின் 25வது படமான ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில், அவரது முதல் படமான பருத்திவீரன் பட இயக்குனர் அமீரை அழைக்கவில்லை. அதனால் சூர்யா குடும்பம் மற்றும் இயக்குனர் அமீர் இடையே என்ன தான் பிரச்சனை என பேச்சு எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் அமீர் பற்றி பல்வேறு புகார்களை கூறினார்.

கணக்கெழுதுவதில் மோசடி செய்தார் அமீர் என அவர் கூறி இருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் ‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை என்றும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

படம் தொடங்கி பாதி கூட முடியாத நிலையில் தயாரிக்க முடியாது என ஞானவேல் போய்ட்டாரு, படத்தை நீங்களே வெச்சுக்கோங்க என சூர்யா அமீரிடம் சொல்லிட்டார், அதன் பின் பல பேரிடம் கடன் வாங்கி தான் அமீர் இந்த படத்தை முடித்தார் என சமுத்திரக்கனி தெரிவித்து இருந்தார். அமீரின் முதல் படமான மௌனம் பேசியதே படத்தை நந்தா பட தயாரிப்பாளர் தான் எடுத்திருந்தார்.

தயாரிப்பாளர் சூர்யாவிடம் வேறொரு பிரபல இயக்குனரை வைத்து படமெடுக்கலாம், அதன் பின் அமீருக்கு வாய்ப்பு தரலாம் என கூறியதாக ஞானவேல் பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு நந்தா பட தயாரிப்பாளர் பதில் கொடுத்திருக்கிறார். “அது சுத்த பொய்.. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சூர்யாவிடம் கேட்டாலே அது பொய் என சொல்வார். அமீரை தான் முதலில் ஓகே செய்தேன், அவர் சொன்ன கதைக்கு தான் சூர்யாவை அதன் பிறகு தேர்ந்தெடுத்தோம்” என அவர் கூறி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஞானவேல்ராஜாவை நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. சமுத்திரக்கனி தன்னுடைய அறிக்கையில், களத்தில் அமீருடன் இருந்து நேரடியாக பார்த்த கார்த்தி கூட இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதுதான் வேதனை தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ‘பருத்திவீரன்’ படத்தின்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் சூர்யாவும் ‘படத்தை நீங்களே வச்சிக்கோங்க அமீர் அண்ணா’ என்று கைவிரித்துவிட்டதையும் மேற்கோள் காட்டியிருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் சூர்யா, கார்த்தி இருவரும் இதில் தலையிட்டு விளக்கம் அளிப்பதே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவருமே இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

இதுதான் சமயம் என நினைத்த ப்ளூ சட்டை மாறன், அமீருக்கு பாரதிராஜா அளவுக்கு சீன் இல்லை தான். நீங்க தயாரிச்ச, ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க மாதிரி பிட்டு சீன் படங்கள் எடுக்கல தான்.. ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் படங்களை தான் எடுத்தாரு பாவம் என பங்கம் பண்ணி வருகிறார். மேலும் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஞானவேல் ராஜாவுக்கும், சிவகுமார் குடும்பத்திற்கும் கேள்வி எழுப்பும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது, “நேர்மையானவர் என்றால் அமீர் ஏன் நிறைய படங்களை இயக்கவில்லை? அவரை வைத்து ஏன் யாரும் படம் தயாரிக்கவில்லை? – ஞான ஈட்டி. ஐயா ஞான ஈட்டி அவர்களே.. ஒரு சமயத்துல நீங்க தயாரிச்ச படமெல்லாம் ஊத்திக்கிட்டப்ப… வேற வழி இல்லாம இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்? இந்த மாதிரி கொச்சையான டைட்டில்கள் தமிழ் சினிமா வரலாற்றுல வந்ததே இல்ல. இப்படியெல்லாம் படம் தயாரிச்சி, இயக்கனும்னு அமீர் நெனைக்கல‌. அதான் நிறைய படம் பண்ணல.” என்று பதிவிட்டுள்ளார்.