25 லட்சம் … திரிஷாவின் கூவந்தூர் விவகாரம்… விஷயத்தை போட்டுடைத்த திரிஷா பட இயக்குனர்…

0
Follow on Google News

நடிகை திரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்த விஷயம், இன்று தமிழகத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவுக்குள் நடந்த மோதல் காரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர், அவர்கள் மாற்று அணிக்கு செல்ல கூடாது என்பதற்காக சகல வசதியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியான நிலையில்,

தற்பொழுது அங்கிருந்த ஒரு அதிமுக முக்கிய தலைவர் எனக்கு திரிஷா தான் வேண்டும் என அடம் பிடித்ததால், சுமார் 25 லட்சம் பணம் கொடுத்து அதிமுகவினர் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் சொகுசு விடுதிக்கு நடிகை திரிஷா வரவழைக்கப்பட்டார் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி. இந்நிலையில் கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்.

தமிழகம் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் உள்ள ஒட்டு மொத்த மீடியாக்களும் கூவத்தூரில் உள்ள அந்த சொகுசு விடுதியை சுற்றி சூழ்ந்து இருந்தார்கள், அப்படி இருக்கையில், ஒரு பிரபலமான நடிகையாக திகழ்ந்த திரிஷா எப்படி மீடியா பார்வையில் இருந்து தப்பித்து கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் சென்று இருக்க முடியும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, அதே நேரத்தில் இந்த விவரகரத்தை எளிதாக யாரும் கடந்து செல்லவும் முடியாது.

உண்மையை உலகிற்கு எடுத்து செல்லும் கடமையும் உண்டு என்கிற வகையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் திரிஷா குறித்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க தொடங்கியவர் அவர் நடித்த படத்தின் இயக்குனர் ஒருவரை தொடர்பு கொண்டு திரிஷா கூவத்தூர் விவகாரம் குறித்து கேட்டுள்ளார், அதற்க்கு அந்த இயக்குனர் திரிஷா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்.பொதுவாகவே ஒரு நடிகை படத்தில் நடிக்க கமிட்டாகி, அந்த படத்திற்கு 60 நாள் கால் சீட் கொடுத்து குறிப்பிட்ட ஒரு தொகையை சம்பளம் வாங்குகிறார் என்றால், அவர் கொடுத்த 60 நாள் கால் சீட் முடிந்து தொடர்ந்து அந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்ட மொத்த சம்பளத்தை 60 நாட்களாக வகுத்து, அதில் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு வருதோ அதை, கூடுதலாக அந்த நடிகை நடிக்கும் ஒவ்வொரு நாளுக்கு கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் அந்த இயக்குனர் திர்ஷாவிடம் கேட்ட கால் சீட் முடிந்தும் எக்ஸ்ட்ரா 10 நாட்கள் திரிஷாவை வைத்து படப்பிடிப்பு எடுத்துள்ளார், அந்த வகையில் திரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் என வைத்து கொண்டால் கூட சுமார் 50 லட்சம் திரிஷாவுக்கு கூடுதலாக சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் எக்ஸ்ட்ரா சம்பளம் வாங்காமலே 10 நாள் கால் சீட் கொடுத்து நடித்து சென்றுள்ளார் திரிஷா என தெரிவித்த அந்த இயக்குனர்.

அப்படியிருக்கையில் பணத்திற்கு முக்கிய துவம் கொடுத்து 25 லட்சம் பணத்திற்காக திரிஷா இது போன்ற செயலை செய்வதற்கு வாய்ப்பில்லை. குறிப்பாக மேலும் திரிஷா எப்பபோதுமே அரசியல் தொடர்புடைய எந்த நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள மாட்டார் என தெரிவித்த அந்த சினிமா பத்திரிகையாளரிடம் தெரிவித்த அந்த இயக்குனர். தற்பொழுது திரிஷா குறித்து வெளியாகியுள்ள 25 லட்சம் கூவத்தூர் விவகாரம் முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவல் என தெளிவு படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.