திரிஷாவுக்கு நடந்த உச்சக்கட்ட அவமானம்… கூவத்தூர் விவகாரதில் நடிகர் விஜய் கூட இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் A.V. ராஜு சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், திரிஷா குறித்து பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.

சமீப காலமாக, த்ரிஷாவை இழிவுபடுத்தும் வகையில் அவரது பெயரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தலைவலிகளை எல்லாம் எதிர்கொண்டு திரிஷாவும் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் திரிஷா குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.

குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என மன்சூர் அலிகான் சர்ச்சை மிக பெரிய அளவில் வெடித்து ஒரு முடிவுக்கு வந்த நிலையில் தற்பொழுது, மீண்டும் ஒரு பிரச்சனை த்ரிஷாவை குறிவைத்து எழுந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார்.

இதுகுறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி A.V ராஜு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கூவந்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த அதிமுக தலைவருக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனால் மூன்றெழுத்து நடிகை தான் வேணும் என்று கேட்டார். அதையும் ஒரு காமெடி நடிகர் தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து கொடுத்தார்.” என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருந்தார்.

நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ்தான், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்காக நடிகைகளை அழைத்து வர ஏற்பாடு செய்ததாகவும் இந்த ஏற்பாட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அவர் A.V ராஜு தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்து, ஆனால் மன்சூர் அலிகானுக்கு பொங்கிய சினிமா துறையினர் A.V ராஜு பேசிய பேச்சுக்கு பொங்கவில்லை.

இதில் இயக்குனர் சேரன் மற்றும் நடிகை கஸ்தூரி போன்ற சினிமா துறையை சேர்ந்த சிலர் மட்டும் தான் A.V ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகரும் அரசியல் தலைவருமான நடிகர் விஜய், இந்த விவகாரம் குறித்து இது வரை வாயே திறக்கவில்லை, தன்னுடன் பல படங்கள் ஜோடியாக நடித்த ஒரு நடிகை என்பதை தாண்டி ஒரு பெண், அதுவும் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு நடக்கும் இந்த அநீதியை தட்டி கேட்கும் பொறுப்பு விஜய்க்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

மேலும் தற்பொழுது அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ஒரு அரசியல் தலைவராக அவருக்கென சில கடமைகள் இருக்கிறது, அந்த வகையில் ஒரு நடிகர் என்பதை தாண்டி ஒரு அரசியல் தலைவராக பொறுப்புடன் நடிகை த்ரிஷாவுக்கு நடந்துள்ள அநீதிக்கு எதிராக விஜய் குரல் கொடுக்க தயங்குவது ஏன்.? ஏ என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், இவரெல்லாம் அரசியலுக்கு வந்து மக்களுக்கான உரிமையை எப்படி பெற்று தருவார் என மக்கள் விஜய்யை வெளுத்து வாங்கி வருகிறார்கள் விமர்சகர்கள்.