கொடைக்கானலில் திரிஷா – விஜய்… கொடைக்கானலில் என்ன நடக்கிறது தெரியுமா.?

0
Follow on Google News

தற்பொழுது ஹாலிவுட் வட்டாரத்தில் திரிஷா மற்றும் நடிகர் விஜய் குறித்து கிசுகிசுகள் தான் பரபரப்பை கிளப்பி வருகிறது. நடிகர் விஜய் உடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்த முதல் படம் கில்லி, மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் விஜய் – திரிஷா கெமிஸ்ட்ரி அருமையாக ஒர்க் அவுட்டாகி உள்ளது என பாசிட்டிவ் விமர்சனம் மக்கள் மத்தியில் வந்தது.

அதனைத் தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் இந்த ஜோடி மீண்டும் நடித்து, இந்த படம் வெற்றி அடைந்தது, விஜய் -திரிஷா ஜோடி ராசியான ஜோடி என்கிற ஒரு தகவல் பரவலானது, மேலும் தொடர்ந்து ஆதி, குருவி எனத் தொடர்ந்து விஜய் – திரிஷா ஜோடி தொடர்ந்து நடித்தனர், அந்த காலகட்டத்தில் திரிஷா மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் கிசுகிசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தது, படப்பிடிப்பு தளத்தில் ஒரே கேரவன் உள்ளே விஜய் – திரிஷா இருவரும் நீண்ட நேரம் இருப்பதாக கூட கிசு கிசு செய்திகள் வெளியானது.

இதனால் விஜய் வீட்டில் பிரச்சனையாக உருவெடுத்து, அவரது மனைவியை திரிஷாவுடன் இனி நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டதாக அப்போது கிசுகிசு செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நீண்ட வருடம் திரிஷா – விஜய் ஜோடி இணையாமல் இருந்து வந்த நிலையில், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா.

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜிடம் நேரடியாக விஜய் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக லண்டனில் நடிகர் விஜயின் மனைவி வசித்து வரும் இந்த வேலையில் விஜய் படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நடிகை திரிஷா நீலாங்கரை விஜய் வீட்டு அருகிலேயே திரிஷா சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்களா வீடு ஒன்று வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் தற்போது திரையில் வெளியாகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு, விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. இதனால் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு என்கின்ற ஒரு செய்தியும் கோலிவுட் வட்டாரங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், விஜயுடன் ஜோடி சேர்ந்த திரிஷா அவர் வீட்டு அருகே புதிய வீடு வாங்கியுள்ளது விஜய் மற்றும் திரிஷாக்கு இடையிலான கிசுகிசுகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருக்கிறது. இதில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்கின்ற ஒரு செய்தி பரவலாக பரவிய நிலையில். இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருக்கிறது உண்மை தான்.

ஆனால் அதில் விஜய் மற்றும் திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லை வில்லனாக நடிக்கும் இயக்குனர் மிஸ்கின் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடிக்கும் காட்சிகள் மட்டுமே கொடைக்கானலில் படமாக்கப்பட இருப்பதாகவும். மேலும் அடுத்தடுத்த வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்பில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.