தொழிலில் கோடிகளை குவிக்கும் நடிகை சிம்ரன்… புக் பண்ணினாலே பணம்… என்ன தொழில் தெரியுமா.?

0
Follow on Google News

ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சிம்ரன். 2000 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் அதிக சம்பளம் வாங்கியாக டாப் ஒன் நடிகை என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்தவர். விஜய், அஜித், என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து கோலிவுட்டில் கொடி கட்டி பறந்த சிம்ரன், பிரசாந்த்,சூர்யா விஜயகாந்த், கமல், முரளி, சரத்துக்குமார் என அவர் நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சிம்ரன் கால் சீட்டுக்காக தயாரிப்பாளரும், இயக்குனரும் காத்திருந்த காலம் அது என்றே சொல்லலாம்.

தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்ரன். பொதுவாகவே, சினிமா பிரபலங்கள் சினிமாவில் சம்பாதித்ததை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சம்பாதிப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், நடிகை சிம்ரன் பல்வேறு பிசினஸ் செய்து வருகிறார். அவர் நடத்தி வரும் பிசினஸ்களில் ஒன்றுதான் GODKA BY SIMRAN ரெஸ்டாரன்ட். இந்த ஹோட்டல் சென்னை திருவான்மியூர் ECR சாலையில் அமைந்துள்ளது.

இந்த ஹோட்டல் பிசினஸ் மூலம் சிம்ரன் பல லட்சங்கள் கல்லா கட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஹோட்டல் பிசினஸில் பல லட்சங்கள் சம்பாதிக்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அந்த ஹோட்டலில் கிடைக்கும் உணவுகளின் விலை பட்டியலை கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், சிம்ரன் நடத்தி வரும் ஹோட்டலின் மெனு கார்டில் எக்கச்சக்கமான உணவு வகைகள் உள்ளன.

அப்படி இந்த ஹோட்டலின் மெனு கார்டில் என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும் எந்த விலைகளில் கிடைக்கும் என்பதை விரிவாக பார்த்தால் தலையே சுத்தி விடும், இப்போதெல்லாம் ஹோட்டல் என்றாலே உணவின் சுவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு ஹோட்டலின் அழகிய அமினிட்டிஸ், லைட் செட்டிங்ஸ் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

ஹோட்டலின் உட்புறம் மனதை கவரும் வகையில் அழகிய தோற்றத்துடனும், லைட்டிங்ஸ் உடனும் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சாப்பிட செல்கிறார்கள். அந்த வகையில், சிம்ரனின் ஹோட்டல் மனதிற்கு இனிய உணர்வைத் தரும் அமினிட்டிஸ் உடன் ஜொலித்து வருகிறது. இந்த ஹோட்டலில் இரண்டு பேர் உட்கார்ந்து சாப்பிட ஒரு டேபிளை புக் பண்ணினால் 700 ரூபாய் ஆகுமாம்.

சாதாரணமாக ஒரு ஆம்லெட் ஆர்டர் செய்தாலே ஆரம்ப விலை 300 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு ஏன் சாதாரண தாளித்த பருப்பு விலை 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். அதேபோல், 130 ரூபாய்க்கு கார்லிக் பிரட், பேபிகார்ன் ரூ. 280, சிக்கன் லாலிபாப் ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறுத்த நண்டு ரூ. 380 விற்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து விதமான சைவ உணவுகளும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் அனைத்து விதமான அசைவ உணவுகளும் சேர்ந்த ஒரு தட்டின் விலை 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சாதாரண ஐஸ்கிரீம் 150 ரூபாய்க்கும், வெவ்வேறு வெரைட்டி ஐஸ்கிரீம் ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு எக்கச்சக்க வெரைட்டி உணவு வகைகளை எதிர வைக்கும் விலையில் விற்பனை செய்தாலும், இந்த ஹோட்டல் ECR சாலையில் அமைதியான சூழலில் அமைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் பணத்தைப் பொருட்படுத்தாமல் ஹோட்டலுக்கு படையெடுக்கின்றனர். இதனால் சிம்ரனின் ஹோட்டல் லட்சங்களை ஈட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சினிமாவில் கலக்கி சிகரத்தை தொட்ட சிம்ரன் இப்போது ஹோட்டல் பிசினஸிலும் கொடி கட்டி பறக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.