அட்ஜஸ்ட்மண்ட் செய்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் நடிகை… டீல் பேசிய பிரபலம்…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. சினிமாவிலும் கடைக்குட்டி சிங்கம் உள்பட சில படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது அருவி சீரியலில் நடித்து வருகிறார். மிகவும் துணிச்சலான இவர் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு 40,000 என சம்பளம் பேசப்பட்டது. ஆனால் அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். தயவு செய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று சொன்னவுடன் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என்று கூறினார்கள்.

அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிறிது நாட்களுக்கு முன்பு ஜீவிதா, ஒரு தனியார் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், சினிமாவில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் தருவதாக சிலர் போனில் என்னை அழைத்தார்.

பாலுமகேந்திராவின் ஆபிஸுக்கு பக்கத்தில் தங்களுடைய ஆபிஸ் இருப்பதாக தெரிவித்தனர். அப்போது நான் சினிமாவுக்கு புதுசு என்பதால் எனக்கு யாரையும் தெரியாது. இந்த வாய்ப்பு வந்ததால் நான் உடனே ஆட்டோவில் கிளம்பிவிட்டேன். அங்கு எல்லாரும் என்னிடம் நல்லா பேசினாங்க. மேலும் அவர்கள் எடுக்க போகும் படத்தில் நான்தான் இரண்டாவது ஹீரோயின்.

முதல் ஹீரோயின் ஒரு பிரபலம் என சொன்னாங்க. எங்களுக்கு ஓகே. இனி நீங்கள்தான் ஓகே சொல்ல வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் உடனே ஓகே என சொன்னேன். அதற்கு அவர்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணணும் என சொன்னார்கள். அட்ஜஸ்ட்மெண்ட்டா என்ன பண்ணனும் என கேட்டேன். அதற்கு அங்கிருந்த இயக்குநர் என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணனும்மா. கேமராமேன், தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடனும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என சொன்னார்.

நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்க ரூமுக்கு வருவோம். தஞ்சாவூர் பக்கத்துல 15 நாட்கள் இப்படி அட்ஜெஸ்ட்மென்ட் நடக்கும். இதுக்கெல்லாம் நீங்கள் ரெடி என்றால் நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்காத அளவுக்கு ஊதியத்தை நாங்கள் கொடுக்கிறோம். அந்த ஊதியத்துடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தந்து உங்களை சினிமாவில் பெரிய ஹீரோயினாக உயர்த்துவோம் என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

உடனே கண்களில் தண்ணீரும் வந்தது. அவர்கள் முன் அழக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இது தான் என் வாழ்க்கையில் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்ட தருணம்” என்றார். மேலும், “பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல், போலீஸ் கெட்டப் என பல்வேறு விதமாக எனது திறமைகளை காட்டியிருக்கிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் நான் நடிக்கவில்லை. மேனேஜருடன் என்னை அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்.

அவர்கள் சொல்லும் ஆட்களை எல்லாம் அனுசரித்து போனால் பெரிய சம்பளம், பட வாய்ப்பு என எல்லாமே கிடைக்கும் என சொன்னார்கள். இது போன்று எல்லா ஆர்டிஸ்ட்களுக்கும் நடக்கும் என சொல்ல முடியாது. ஆனால் என்னிடம் இப்படி கேட்டார்கள். நான் முகத்திற்கு நேராக முடியாது என சொல்லிவிடுவேன். பட வாய்ப்புகளும் எனக்கு கிடைக்காது” என ஜீவிதா பேசியிருந்தார்.