நிவேதா பெத்துராஜ் 50 கோடி ரூபாய் பங்களா விவகாரம்… வசமாக சிக்கிய சவுக்கு சங்கர் …

0
Follow on Google News

சமூக வலைதளத்தில் பிரபலமாக இயங்கி வரும், சவுக்கு சங்கர் இதற்கு முன்பு, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி இருந்தார். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய போது முக்கிய புள்ளிகளுக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்த சர்ச்சையில் பணியில் இருந்து நீக்கபட்டார், அதற்குப்பின் அரசியல் விமர்சகர் என தன்னை அடையாளப்படுத்தி கொண்டு, சவுக்கு என்ற தனியார் யூடியூப் சேனலில் அரசியல் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சில நாள்களாக வைரல் ஆகியது. அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்தும் சில ஆட்சேபனைக்குரிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருந்தார், மேலும் அதுசார்ந்த எந்த ஆதாரங்களும் வைரலான அந்த வீடியோவில் காட்டப்படவில்லை.

அதில் அவர், தன் மீது அதிக பொசசிவ் ஆக இருக்கும் ஒரு ரசிகைக்காக உதயநிதி ஸ்டாலின் துபாயில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சின்ன வீட்டை கட்டி தந்திருக்கிறார். இது யாருக்காவது தெரியுமா? இந்தியாவில் வாங்காமல் அவர் துபாயில் வாங்கியதற்கு காரணம் அவர் உதயநிதி மேல் ரொம்ப பொசசிவ் ஆக இருக்கிறார். இதனால் இந்தியாவிலேயே அவர் இருக்க கூடாது என்று தான் துபாயில் அவருக்கு வீடு வாங்கி அங்கே வைத்திருக்கிறார் என சவுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இப்படி சவுக்கு சங்கர் பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கத்தையும் அளித்தார். அதாவது, “சமீபகாலமாக எனக்கு சிலர் பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தியை பரப்புவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு முன், அந்த தகவல் குறித்த உண்மையை சரிபார்க்கும் அளவிற்காவது மனிதாபிமானம் இருக்கும் என்பதற்காக இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம், இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் சற்று சிந்தியுங்கள் என வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

இந்த சூழலில், சவுக்கு சங்கர் தநது யூடியூப் சேனலில் இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்து வருகிறார். மேலும், இந்த விவகாரத்தில் லைகா நிறுவனத்தையும் தொடர்புப்படுத்தி சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கை தொடர்ந்தது. அதில், லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கர் ரூ.1 கோடியே ஆயிரம் ரூபாயை நஷ்ட ஈடாக தங்களுக்கு வழங்க வேண்டும் என லைக்கா தெரிவித்து இருந்தது.

லைகாவுக்கு சாதகமாக சமநிலையைக் கண்டறிந்த நீதிமன்றம், ஷங்கரை மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தடை விதித்தது. வழக்கின் வரவுக்கு வருவாயை டெபாசிட் செய்யுமாறு யுடியூப் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் லைக்கா நிறுவனம் போன்று நடிகை நிவேதா பெத்துராஜ் நீதிமன்றம் சென்று தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடுக்க
வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அப்படி வழக்கு பதிவு செய்தால் மட்டுமே, அவதூறு பரப்புகின்றவர்களை அடக்க முடியும் என நிவேதா பெத்துராஜ்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நிவேதா பெத்து ராஜ் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து சென்ட்ரல் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய துபாய் 50 கோடி பங்களா விவகாரம் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.