ரஜினிக்கு போட்டியா கமலுக்கு மகளாக நடித்த நடிகை நிவேதா தாமஸ்..

0
Follow on Google News

மலையாள நடிகை நிவேதா தாமஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்அவுட் பக்கத்தில் நின்று அதே போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.மலையாள நடிகையான நிவேதா தாமஸ் 2001 முதல் தமிழில் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதான் பிறகு தான் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வந்தார்.

இவர் த்ரிஷ்யம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்பபடத்தில் உலக நாயகன் கமலுக்கு மகளாக நடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜனிக்கு மகளாக நடித்துள்ளார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி வாயில் சிகரெட்டுடன் இருக்கும் பழைய திரைப்படத்தின் புகைப்படத்தை கொண்ட கட்அவுட் ஒன்று பாண்டிச்சேரியில் உள்ள Cafe Des Arts என்ற தனியார் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்ற நிவேதா தாமஸ் அங்கு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த புகைப்படத்தின் பக்கத்தில் நின்று, அதே ஸ்டைலில் போஸ் கொடுத்து “Idhu eppadi irukku?” ? என்று அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.