கோயம்பேடு பிளாட்பாரத்தில் தொடங்கிய நயன்தாரா வாழ்க்கை.. பலருக்கு தெரியாத ரகசியம்…

0
Follow on Google News

நயன்தாராவிற்கு, நடிப்பே சைடு பிசினஸாக ஆகும் அளவுக்கு செம்ம பிசியான தொழிலதிபராக வலம் வருகிறார். அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல, தமிழ்நாட்டில் இருந்து துபாய் வரையிலும் பல பிசினஸ் செய்து தொழிலதிபராக கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பெண் தொழிலதிபர்களின் லிஸ்டில் நயன்தாரா தான் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் தான் இவர் சினிமா துறைக்கு வந்தது முதலே, அவருக்கு வரும் வருமானத்தை வேறு வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். சின்ன சின்ன டீக்கடைகள், பெட்ரோல் பங்க் தொடங்கி, பெரிய பெரிய பிசினஸ் வரை நயன்தாரா முதலீடு செய்திருக்கிறார். துபாயில் கூட அவர் பிசினஸ் செய்து வருகிறார்.அதேபோல் அழகு சாதன பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவும் கடந்த ஆண்டு நினைவானது.

அவர் 9 ஸ்கின் என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதில் சருமத்திற்கு தேவையான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இதுதவிர லிப்ஸ்டிக்கிற்கு மட்டும் தனியாக லிப் பாம் என்கிற கம்பெனியையும் நடத்தி வருகிறார். மேலும் பெமி9 என்கிற நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் விற்பனையும் தற்போது படுஜோராக நடைபெற்று வருகிறது.

இதுதவிர டிவைன் புட்ஸ் என்கிற நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார். அந்நிறுவனம் ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதோடு பல Advertisement-களிலும் நடித்து அதன் மூலமும் சம்பாதிக்கிறார். மேலும் நாகர்கோவிலில் ஆர்யபவன் உணவகம், இதுதவிர விக்கி பிலிக்ஸ், டார்க் டேலண்ட், கார்பன் மெட்ராஸ், கிரியேட் வெர்ஸ் போன்ற நிறுவனங்களிலும் நடிகை நயன்தாரா முதலீடு செய்து இருக்கிறார்.

துபாயில் தளமாகக் கொண்ட ஒரு புதிய எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய துபாய் முதலீட்டை சகோதரர் பொறுப்பில் விட்டுவிட்டாராம், நயன்தாராவின் சகோதரர் ஏற்கனவே பல வருடங்களாக துபாயில் முதலீடு செய்து பெரும் லாபத்தை சம்பாரித்து வருகின்றவர், மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் கொடி கட்டி பறந்து வரும் நயன்தாரா இன்று தனியாக ஜெட் விமானத்தில் பறந்தாலும் அவருடைய ஆரம்ப கால வாழ்கை கண் காலங்க வைத்துவிடும்.

கேரளவில் உள்ள தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நயன்தாராவுக்கு ஹரி இயக்கத்தில், சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் நடிப்பதற்கு சென்னையில் நடக்கும் ஆடிசனுக்கு அழைப்பு வந்துள்ளது, அன்று நயன்தாரா விமானத்தில் வரும் அளவுக்கு வசதி இல்லாததால், ஆம்னி பஸ்ஸில் கேரளவில் இருந்து கோயம்பேடு வந்துள்ளார்.

அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி ஆடிசன் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார் நயன்தாரா, இப்படி ஆம்னி பஸ்ஸில் கேரளவில் இருந்து வந்த நயன்தாரா, அவர் நடிக்கும் படத்தில், தனி கேரவன் வேண்டும், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன், என படப்பிடிப்பும் தளத்தில் நயன்தாரா செய்யும் அட்ராசிட்டியை கேள்விப்பட்டு ஆம்னி பஸ்ஸில் வந்து கேயம்பேடு பாஸ்ட்டண்ட்க்கு வந்ததெல்லாம் நினைவில் இல்லையா என விமர்சனம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here