தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை நயந்தாரா திருமணம் செய்து கொண்ட பின்பு, அவருடைய சினிமா மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்தது. திருமணத்திற்கு முன்பு நயந்தாரா ஒப்பந்தம் செய்து கொண்ட திரைப்படத்திற்கு கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், பல தயாரிப்பாளர்கள், உன் கால் சீட் வேண்டாம், கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடு என வாங்கி சென்று வந்தனர்.
இந்நிலையில் நயன்தாரா திருமணத்திற்கு முன்பு கமிட்டான படம் அன்னபூரணி, தற்பொழுது இந்த படத்தின் பெயரை பூரணி ஏன் மாற்றம் செய்து, நயன்தாரா சமையல் கலை நிபுணராக நடித்துவரும் பூரணி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பட குழுவினர் திருச்சியில் அனைத்து ஏற்பாடும் செய்திருந்த நிலையில், மொத்த படக்குழுவும் திருச்சி கிளம்புவதற்கு தயாரான கொண்டிருக்கையில்,
நயன்தாரா திடீரென்று நான் அவுட்டோர் சூட்டிங் வரமாட்டேன், சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் மட்டும் தான் கலந்து கொள்வேன். அப்படி நீங்கள் அவுட்டோரில் சூட்டிங் எடுக்க வேண்டும் என்றால் என்னைப் போன்று ஒரு டூப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தடாலடியாக தெரிவித்து விட்டாராம். இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது புதிதாக கமிட் செய்ய வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளிகளும் பல்வேறு கண்டிஷன் போடுகிறாராம்.
அதாவது தான் குழந்தைகளுடன் சென்னையிலே இருக்க வேண்டி இருப்பதால் வெளியூரில் படப்பிடிப்பில் நான் கலந்து கொள்ள மாட்டேன். சென்னையில் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று கடும் கண்டிஷன் போடுகிறாராம். ஆனால் நயன்தாரா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பூரணி திரைப்படம் நயன்தாரா திருமணத்திற்கு முன்பே கமிட்டாகி அட்வான்ஸ் பெற்ற திரைப்படம்.
அந்த வகையில் இந்த படத்தில் கமிட்டாகும்போது இதுபோன்று அவுட்டோர் சூட்டிங் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்கிற கண்டிஷன் எல்லாம் நயன்தாரா போட கிடையாது. தற்பொழுது புதிதாக கமிட்டாகும் படத்தில் மட்டும் தான் நயன்தாரா கண்டிஷன் போடுகிறார். இதனால் பூரணி படக்குழு திருச்சியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்த பின்பு, கடைசி நேரத்தில் நான் அவுட்டோர் சூட்டிங் வரமாட்டேன் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் நயன்தாரா தவிர்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் திருச்சிக்கு சென்று நயன்தாரா இல்லாத பட காட்சிகளை அங்கே படமாக்கி உள்ளார்கள். நயன்தாரா நடிக்கும் காட்சிகளை சென்னையில் செட் போட்டு நயன்தாராவை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு முடிவில் இருக்கிறது பூரணி பட குழுவினர். இந்நிலையில் நயன்தாரா திருமணத்திற்கு பின்பு வாய்ப்பு குறைந்தாலும் அவருடைய அட்ராசிட்டி குறையவில்லை எனக் கூறப்படும்.
மேலும் படவாய்ப்பு இல்லை என்றாலும் ஏற்கனவே 10 கோடி வாங்கிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா தற்போது 12 கோடியாக உயர்த்தியுள்ளார். இருந்தாலும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நயன்தாராவை கமிட் செய்வதற்கு முன்பு அவர் கண்டிஷன் போட்டு ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன்பு அவுட் டோர் ஷூட்டிங் இருக்கும் நீங்கள் வர கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கடுமையான கண்டிஷன் போட்டு கமிட் செய்யவேண்டும். அப்படி எல்லாம் கலந்து கொண்டால் நீங்கள் கேட்கும் சம்பளத்தை தருகிறோம். அப்படி இல்லை என்றால் அவுட்டோர் சூட்டிங் வரவில்லை என்றால் அதற்கு இரண்டு கோடி குறைக்கப்படும். அல்லது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு ஒரு கோடி ரூபாய் கழிக்கப்படும்.
இப்படி கடும் கட்டுப்பாடுகள் விதித்து நயன்தாராவை தயாரிப்பாளர்கள் கமிட் செய்யவேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உருவாகினால் மட்டுமே நயன்தாரா போன்ற நடிகைகளின் ஓவர் அட்ராசிட்டிக்கு ஒரு முடிவு கட்டப்படும் என்கின்றனர் சினிமா துறையின்