சிறையில் கம்பி என்ன தயாராகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்.. எத்தனை வருடம் சிறை தண்டனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஒன்பதாம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்கின்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு தற்பொழுது பெரும் சட்டசிக்கலில் சிக்கி தவித்து வருகின்றனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9 தேதி மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக, முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்ட இவர்கள் திருமணம் நடைபெற்றது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் அக்டோபர் 9 தேதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது என்கின்ற தகவலை வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்கள் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காமல், இந்திய சட்டத்திற்கு எதிராக வடக்கை தாய் விவகாரத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரு தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் திருமணம் முடிந்து 5 வருடம் முடிந்து இருக்க வேண்டும். தம்பதியினரில் யாரோ ஒருவருக்கு மலட்டுத்தன்மை நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் வாடகை தாய்க்கு பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. ஒரு பெண்ணால் உடல் ரீதியாகவும், மருத்துவர் ரீதியாகவும் குழந்தை பெற முடியாமல் போகும்போது மட்டுமே அந்தப் பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும்.

இப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சட்டத்தை மீறி இரட்டை குழந்தை பெற்றுள்ள விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அரசு தரப்பில் இருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் பெற்றுக் கொள்ளும் விதிமுறைகளை பின்பற்றி தான் குழந்தையை பெற்றுக் கொண்டாரா, என்பது குறித்து மருத்துவ சேவை இயக்குனர் மூலம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தை பெற்று விவாதத்தில், இரட்டைக் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை அரசு தரப்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இவர்கள் இரட்டை குழந்தை பெற்றார்களா, என விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணையின் அறிக்கை அடுத்த ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தை விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி இவர்கள் குழந்தை பெற்றிருந்தால், இருவருக்கும் சட்டப்படி 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் இரட்டை குழந்தை விவகாரத்தில் தங்களை சட்ட சிக்கலிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா கலந்து கொள்ள இருந்த படப்பிடிப்பு அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, தற்பொழுது இரட்டை குழந்தை விவகாரத்தில் சிறை செல்லாமல் தப்பிப்பதற்கான வழிகளை தேடி வருகிறார் நயன்தாரா என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.