பேச்சுவார்த்தை தோல்வி… விஜய்யை ஒரு கை பார்த்து விடுகிறேன்… சவாலுடன் களத்தில் இறங்கிய அஜித்..

0
Follow on Google News

முன்னணி நடிகர்களின் வரிசை பட்டியலில் தற்பொழுது விஜய் முதல் இடத்தில் இருந்து வருகிறார், இதற்கு காரணம் நடிகர் அஜித்தை விட விஜய் படம் வசூல் ரீதியாக அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. வசூல் விஜய் படத்தை விட அஜித் படம் அதிகமாக வசூல் செய்தாலும் தொடர்ந்து விஜய் வசூல் ரீதியாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் நடிகர் அஜித் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். விஜய் தற்பொழுது வாரிசு படத்தில் நடித்து வருகிறார், அதே போன்று நடிகர் அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருக்கிறது, விஜயின் வாரிசு படம் பொங்கல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அஜித்தின் துணிவு படம் தீபாவளி வெளியாகும் என்று தகவல் வெளியானது.

ஆனால் துணிவு படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், விஜய் நடித்த வாரிசு படம் வெளியாகும். அதே தேதியில் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் இரண்டு முன்னணி நடிகர்கள் படமும் ஒரே நேரத்தில் வெளியானால் இரண்டு படத்திற்கு வசூல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் பரப்பு நியாயங்களை எடுத்துரைத்து உள்ளன.

இருந்தும் நடிகர் அஜித், இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வசூல் ரீதியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், வசூலில் யார் உண்மையிலேயே முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து ஆக வேண்டும் என்கின்ற உறுதியுடன் விஜய்யின் வாரிசு படம் வெளியாகும் முந்தைய தேதியில் அஜித்தின் துணிவு படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!