நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சதிரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மீனாவின் தயார் கேரளாவை சேர்ந்தவர், அவருடைய தந்தை ஆந்திராவை சேர்ந்தவர். 20க்கு மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா. முதலில் தெலுங்கு படங்களில் தான் கதநாயகியாக அறிமுகமானார், தமிழில் அவர் கதநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே படம் செம்ம ஹிட் அடித்தது.
இருந்தும் தெலுங்கு சினிமாவில் ஒரு வருடத்துக்கு 10 படங்கள் வரை நடிக்கும் பிசியான நடிகையாக இருந்ததால் தமிழ் படங்களில் அவரால் கால் சீட் கொடுக்க முடியவில்லை, இதனை தொடர்ந்து எஜமான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக மீனா நடித்த பின்பு அவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் உருவானார்கள், இதன் பின்பு தமிழ், தெலுங்கு சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னனி கதநாயகியாக இருந்தார் மீனா.
2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகர் என்பவரை தன்னுடைய 33வது வயதில் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வித்யாசாகர் பெங்களூரில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகை மீனா குடும்பத்துடன் பெங்களுரில் வசித்து வருகிறார். பெரும்பாலும் சென்னையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் கணவருடன் பெங்களூரில் தான் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். கொரோனா தொன்றின் போது மீனா மற்றும் அவரது கணவர் என குடும்பத்தினர் அனைவரும் கொரானா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.
ஆனால் கொரோனா தொன்றில் பாதிக்கப்பட்ட மீனா கணவர் வித்யாசாகர் மட்டும் அதன் பின்பு அடிக்கடி நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம், பெங்களூரில் உள்ள அவரது வீட்டை சுற்றி புறாக்கள் அதிகமாக இருப்பதாகவும், புறாக்கள் எச்சம் அவர் வீட்டை சுற்றி அதிகம் காற்றுடன் கலந்துள்ளதால், அந்த புறாக்கள் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த வித்யாசாகர்க்கு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது.
புறாக்களின் எச்சம் கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் சில நபர்களுக்கு இது போன்று நுரையீரல் பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நுரையீரலும் முழவதும் பாதிக்கப்பட்ட நிலையில், மாற்று நுரையீரலுக்காக முளை சாவு அடைத்தவர்களின் நுரையீரல் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான வாய்ப்பு அமையவில்லை, இருந்தும் மருத்துவர்கள் போராடியும் மீனா கணவரை காப்பாற்ற முடியாமல் போனது, மீனா குடும்பத்தை மட்டுமில்லை, தமிழ் திரைதுறையினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.