சிவகுமார் குடும்பத்தை டோட்டல் டேமேஜ் செய்த ஜோதிகா… ஒரே ஒரு வீடியோ தான்… மொத்தமும் போச்சு.!

0
Follow on Google News

தங்களை சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக வெளிபடுத்தும் நட்சத்திர தம்பதியினர் சூர்யா – ஜோதிகா இருவரும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தில் மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யலாம் என மேடை ஒன்றில் பேசி கடும் எதிப்புகளுக்கு உள்ளனார் நடிகை ஜோதிகா.

அதே போன்று கடந்த ஆட்சியில் வருடம் வருடம் நீட் தேர்வு நடைபெறும் போது, மாணவர்கள் தற்கொலை குறித்து பொங்கி எழுந்து அறிக்கை விடும் நடிகர் சூர்யா, சமீபகாலமாக நீட் தேர்வு குறித்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் நீட் தேர்வு தற்கொலைக்காக பொங்கி எழுந்தார் நடிகர் சூர்யா. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஸ்ரீநிதி மர்மமான முறையில் மரணம் அடைந்தது பற்றி மூச்சு விடவில்லை சூர்யா மற்றும் அவரது குடுமபத்தினர்.

இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறிய சூர்யா இந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி வருகிறார். ஆனால் சூர்யா தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர். அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுவருகிறேன். மற்றபடி நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பையில் செட்டிலாகவில்லை’ என அனைவரும் அசந்து போகும் வகையில் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார் சூர்யா.

இந்நிலையில் சூர்யா அவருடைய குழந்தைகளை படிக்க வைக்க ஏன் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த பள்ளி கூடவா அவர் கண்ணில் தென்படவில்லை, அல்லது தமிழ்நாட்டில் படித்தால் அவர்கள் குழந்தைகள் படிக்காத என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் நீட் தேர்வு, மும்மொழி கொள்கைக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்த்து குரல் கொடுத்து வந்த நடிகர் சூர்யா அவருடைய இரண்டு குழந்தைகளை மும்பையில் படிக்க வைத்து வருவது யாரை ஏமாற்ற என கடும் விமர்சனம் சூர்யா மீது எழுந்தது.

இப்படி சூர்யாவின் முகத்திரை நாளுக்கு நாள் கிழிந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவின் போது சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். ஆனால் இவர்களுடன் சூர்யா மனைவி ஜோதிகா வராதது ஏன் என கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.

அதாவது வாக்களித்த ஜனநாயக கடமையாற்ற வேண்டிய ஜோதிகா எங்கே என மக்கள் தேட, ஜோதிகா அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில் தான் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள ஜோதிகா நேபால் நாட்டில், தன்னுடைய சுற்றுலா குறித்து பகிர்ந்துள்ளார், அதில் அங்கே இருக்கும் இயற்கை பற்றியும் அதனால் தான் அடைந்த மகிழ்ச்சி குறித்து பகிர்ந்த ஜோதிகாவின் இந்த வீடியோ மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டிய ஜோதிகா ஓட்டு போட வராமல் இன்ப சுற்றுலா சென்றுள்ளது.. முதலில் உங்க குடும்பத்தில் இருப்பவர்கள் ஜனநாயக கடமையை செய்யுங்கள், பின்பு ஊருக்கு உபதேசம் செய்யலாம் என சூர்யா குடும்பத்தினர் ரவுண்டு கட்டி பலரும் விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.