எனக்கு வயசு ஆகிருச்சு… அந்த விஷயத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லை… வெளிப்படையக பேசிய ஜோதிகா…

0
Follow on Google News

தங்களை சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக வெளிபடுத்தும் நட்சத்திர தம்பதியினர் சூர்யா – ஜோதிகா இருவரும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தில் மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யலாம் என மேடை ஒன்றில் பேசி கடும் எதிப்புகளுக்கு உள்ளனார் நடிகை ஜோதிகா.

அதாவது சூர்யா அரசியல் சார்ந்தது எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத வரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களை அணைத்து தரப்பு மக்களுக்கு பார்த்து கொண்டாடினார்கள். ஆனால் எப்போது சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் தங்களை ஒரு சமூக போராளியாக முன்னிறுத்தி கருத்து தெரிவித்து வந்தார்களோ இதன் பின்பு சூர்யா நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே கணவன் சூர்யா சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்து வந்துள்ள ஜோதிகா, இதனால் பெரும் லாபத்தை சம்பாரித்து வந்த சூர்யா, பெரும்பாலும் சென்னையை விட மும்பையில் தான் குடும்பத்துடன் அதிக நாட்கள் கடந்த சில வருடமாக தங்கி வந்தார்.

இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் சூர்யா. மேலும் நடிகர் சூர்யா சென்னையில் அரண்மனை போன்று மிகப் பெரிய வீடு ஏற்கனவே உள்ள நிலையில், மும்பையில் குடியேறியுள்ள சூர்யா, ஏற்கனவே மும்பையில் சூர்யாவுக்கு வீடு இருக்கையில் மேலும் மும்பையில் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய டபுள் எக்ஸ் வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சூர்யா நிரந்தரமாக மும்பையில் வசிப்பது என முடிவு செய்துவிட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில், ஒரு வித மாஃபியா உண்டு, அந்த மாஃபியா கும்பலை தாண்டி புதியதாக யாரும் இந்தி சினிமாவில் வளர முடியாது, ஜோதிகாவின் தாய் – தந்தை இருவரும் இந்தி சினிமா துறை பின்னணியில் உள்ளவர்கள், அந்த வகையில் இந்தி சினிமா மாஃபியா கும்பல் என்று கூறப்படும் அந்த குறிப்பிட்ட தரப்பினருடன் ஜோதிகா குடுப்பதினாருக்கு நெருக்கிய தொடர்பு உண்டு,

அந்த வகையில் தன்னுடைய கணவர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் ஜோதிகா ஈடுபட்டு வந்த நிலையில், அதுவும் சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை, இந்நிலையில் ஜோதிகா மும்பைக்கு சென்ற பின்பு ஷைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு ஹிந்தி படங்களில் நடித்தவர்,

தற்போது Dabba Cartel என்ற வெப் சீரியலில் நடித்து உள்ளார், இந்நிலையில் சமிபதியில் அவர் அளித்த பேட்டியில், காதல் மையப்படுத்திய படங்கள், ஹீரோக்களுடன் டூயட் பாடும்படியான படங்களில் நடிப்பதை நான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன். இப்போது எனக்கு 47 வயதாகிறது என தெரிவித்த ஜோதிகா, ஹீரோக்களை சுற்றி ஓடுவது, காதல் மையமான படங்கள் எல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது என வெளிப்படையாகவே தனக்கு 47 வயதாகிறது என போட்டுடைத்தவர், ஹீரோக்களை சுற்றி ஓடுவது, காதல் மையமான படங்கள் என அந்த மாதிரியான விஷயத்தில் விருப்பமே இல்லாமல் போச்சு என ஜோதிகா ஓப்பனாக பேசியுள்ளது குறிப்பிடதக்கது.