அதிதி சங்கரின் அட்ராசிட்டி… தந்தை பெரிய ஆள் தான்… அதுக்காக இப்படியா.?

0
Follow on Google News

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி எப்போது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். அதன்படி, தற்போது மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்திற்காக இரவும் பகலுமாய் நடிகர் சூர்யா உழைத்து வருகிறார்.

இந்த படத்திற்காக மிகவும் அதிகமான மெனக்கிடல்களில் இறங்கி இருக்கிறார் சூர்யா. இப்படம் முடிந்தவுடன் சூர்யா 43 இயக்குனர் சுதா கோங்குராவுடன் இணைகிறார். மேலும், இந்த படத்தை பற்றிய சில அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளது. கிங் ஆஃப் கோதா படத்தின் கோதா ராஜேந்திரன், அதாவது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் துல்கர் சல்மான் சூர்யாவின் 43வது படத்தில், சூர்யாவிற்கு தம்பியாக நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இது இவர் இசையமைக்கும் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்த படைத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வாரிசாக திரை துறையில் நுழைந்தவர் தான் அதிதி ஷங்கர். தன்னுடைய மகள் படித்து மிகப்பெரிய மருத்துவராக வேண்டும் என்ற கனவில் ஷங்கர் இருந்தார். அதன்படி எம்பிபிஎஸ் படிப்பையும் முடித்த அதிதி எனக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் மருத்துவ தொழில் செய்யாமல் நடிகையானார். சினிமாவைப் பொறுத்தவரையில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தானாகவே நிறைய வாய்ப்புகள் வருவது சாதாரணம்தான்.

அப்படி அதிதி சங்கருக்கு கேட்காமலே நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கிறது. கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் அறிமுகமான அதிதி அடுத்ததாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பட வாய்ப்பு பெற்றுக் கொண்டே உள்ளார். அதற்கு ஒரே காரணம் இவரின் அப்பா தான். பாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை நெப்போடிசம் உள்ளது என்பது தொடர் சர்ச்சையாக இருந்து வருகிறது.

நன்றாக நடிக்காமலே பட வாய்ப்பை தட்டிக் கொண்டு போய் விடுகின்றனர். அதிலும் குறிப்பாக அதிதி சங்கர் கியூட் என்று cringe செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அதிதி பாடிய விருமன் படத்தில் இடம்பெற்ற மதுர வீரன் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி என்றும் ஆனால் வேண்டுமென்றே அவர் பாடிய பாடலை அதிதியை வைத்து பாட வைத்து அவரை ஓரம் கட்டினர் என்கிற சர்ச்சை அப்போது வெடித்தது.

அதே சம்பவம் தான் மாவீரன் படத்திலும் அரங்கேறி இருக்கிறது. அதாவது வண்ணாரப்பேட்டையில் என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக அமைந்தது. ஆனால் முதலில் இந்த பாடலுக்கான வாய்ப்பு மீனாட்சி இளையராஜா என்பவருக்கு தான் கிடைத்திருக்கிறது. அந்தப் பாடலையும் மீனாட்சி இளையராஜா பாடிய பிறகு அதிதி சங்கரும் இந்த பாடலை பாடிய நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இவர் பாடியதை ஓகே சொல்லி விட்டார்களாம்.

ஒரு பிரம்மாண்ட இயக்குனரின் மகளாக இருப்பதால் இவருக்கு அனைவரும் ஓகே சொல்லி வருகின்றனர்.
முதல் படத்திலேயே தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தார் அதிதி ஷங்கர். அதேவேகத்தில் அண்ணன் சூர்யாவுடனும் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு சாக்காக அமைந்துள்ளது. இதனிடையே ஹரிஷ் கல்யாண், சிம்பு ஆகியோரின் ஜோடியாக மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் ஜோடியாக அதிதி சங்கர் காமியாகியுள்ளது, இவருக்கு நடிக்கவே தெரியவில்லை, மேலும் இவருடைய நடிப்பு பேசும்படியாக இல்லை, தன்னுடைய தந்தை மிக பெரிய இயக்குனர் என்பதற்காவே அதிதி சங்கர் படவாய்ப்புகளை பெற்று வருவதாகவும், மேலும் அடுத்தவர்கள் வாய்ப்புகளை அதிதி சங்கர் தட்டி பறித்து வருவது தொடர் கதையாகவே இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் மூணு முனுத்து வருகிறார்கள்.