தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சமந்தா, தன்னுடைய சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் மகன் நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவேன், என்னுடைய சுதந்திரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்கின்ற கண்டிஷனுடன் தான் நாகசைதன்யாவை திருமணம் செய்ய சம்மதித்தார் சமந்தா.
திருமணம் முடிந்தும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது, தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வந்த நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு நாகசைதன்யாவை குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சுழலில் மனைவிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கணவர் நாகசைதன்யா தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் ஓன்று சேர்ந்து சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா கணவரை விட்டு பிரிந்தார், இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புதிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு உடல் நல குறைவால், உடல் ரீதியாக கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார் சமந்தா. அவருக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு காரணமாக சமந்தா எழுந்து நடக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.
இதனால் கடும் அவதிப்பட்டு வந்த சமந்தா மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மயோஸிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, அவரால் படுக்கையில் இருந்து எழக்கூட முடியாத அளவுக்கு அதிக வலியுடன் பாதிக்கப்பட்டிருந்தார்.
சமந்தாவின் உடல் மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், சமந்தாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஓரளவு குணமாகியுள்ளார் சமந்தா. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சமந்தாவுக்கு வந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார் சமந்தா.
இந்நிலையில் சமந்தா தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை பொண்ணு என்பதால், அவர் சென்னையில் வந்து செட்டில் ஆக வேண்டும் என்றாலும், அவரால் முடியவில்லை, இதற்கு காரணம்,திருமணத்திற்கு பின்பு நிரந்தரமாக வீடு வாங்கி தங்கிய ஹைதெராபாதில் தங்கிய சமந்தா அங்கே சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளார். மேலும் ஹைதெராபாதில் அவருக்கு நண்பர்களும் அதிகமாக இருக்கிறார்கள், இதனால் ஹைதெராபாத் விட்டு வெளியேற முடியமால் தவித்து வரும் சமந்தா, சென்னையில் இருந்த அவருடைய தாயாரை ஹைதெராபாத் அழைத்து சென்று உடல்நிலை சரியில்லாத தனக்கு உதவியாக வைத்து கொண்டுள்ளார்.