பயத்தில் ஆடியோ நிகழ்ச்சியை ரத்து செய்த விஜய்… மிரட்டல் எங்கிருந்து வந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயின் என்ன பேச இருக்கிறார் என்கின்ற விவாதம் விஜய் ஆடியோ வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பே அனல் பறந்தது.

நடிகர் விஜய்க்கும் ரஜினிக்கும் சமீப காலமாக நடந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கழுகு- காக்கா கதை சொல்லி நடிகர் விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது ரஜினிகாந்தின் பேச்சு. அந்த வகையில் ரஜினிகாந்த் இந்த பேச்சுக்கு குட்டி கதை சொல்லி அவருடைய பாணியில் விஜய் பதிலடி கொடுப்பாரா என்கின்ற எதிர்பார்ப்பும்,

அதே நேரத்தில் சமீப காலமாக விஜயின் அரசியல் நகர்வுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நிச்சயம் விஜயின் பேச்சின் அரசியலும் இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவாக அரசியல் வட்டாரங்களிலும் இருந்து வந்தது, இந்த நிலையில் விஜய் ஆடியோ வெளியீட்டு விழா திடீரென்று நடைபெறாது என ரத்து செய்யப்பட்டுள்ளது பின்னணியில் பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை போன்றே விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ விளையாட்டு வந்துவிடும் என்பதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவதில் சிறிதும் உண்மை இல்லை என கூறப்படுகிறது. காரணம் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி ஒரு பொது மைதானத்தில் சுமார் 20,000 மேற்பட்டவர்கள் கூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் 40,000 பேருக்கு மேல் டிக்கெட் விற்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடி தான் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம், ஆனால் விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்பது நேரு உள் விளையாட்டு அரங்கில் சுமார் வெறும் 4000 நபர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் நிகழ்வு போன்று இங்கே குளறுபடி ஏற்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதால் அதேபோன்ற பிரச்சினை வரும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என் என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது விஜய் அரசியல் ரீதியாக கருத்துக்கள் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்அப்படி அரசியல் ரீதியாக கருத்துக்கள் தெரிவித்தால் மிகப்பெரிய பின்வளவைகளையும் விஜய் சந்திக்க நேரிடும் என்பதை விஜய் நன்கு அறிந்திருப்பார். அதே நேரத்தில் விஜயின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் சில அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றது என்ற ஒரு கருத்தும் உலாவி வரும் நிலையில்,

அப்படி ஒரு அரசியல் அழுத்தம் காரணமாக விஜய் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்தார் என்றால், அவர் அரசியல் கட்சி தொடங்கினால் தெருமுனை கூட்டம் முதல் பிரம்மாண்ட கூட்டம் வரை நிச்சயம் அவருக்கான அரசியல் அழுத்தம் இருக்கும், அப்படி இருக்கும் போது எப்படி அவரால் அது போன்ற அழுத்தங்களை சமாளித்து அரசியலில் வெற்றி பெற முடியும் என்கின்ற கேள்வியையும் விஜயை நோக்கி பலரும் எழுப்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இதற்கு முன்பும் கூட விஜய் சில அரசியல் காரணங்களாக அந்தர் பல்டி அடித்து கைகட்டி வருத்தம் தெரிவித்த நிகழ்வும் கூட அரங்கேறி இருந்தது, இந்த நிலையில் இப்படி பயந்து கொண்டு முடங்கும் விஜய் அரசியலில் எப்படி ஜொலிக்க முடியும், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு முதலில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்து உருவாகி வரும் நிலையில் இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.