நரம்பு புடைக்க பேசும் சத்யராஜ்க்கு விழுந்த தரமான சவுக்கடி சம்பவம்… கன்னட நடிகரின் மனிதநேயம்..

0
Follow on Google News

தமிழ்நாடு – கர்நாடக இடையிலான காவேரி விவகாரம், எத்தனை வருடமானாலும் இரண்டு மாநிலதில் உள்ள சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக முடிவுக்கு கொண்டு வராமல், இரண்டு மாநில மக்களின் உணர்வூகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது, இப்படி அரசியல் கட்சிகள் மக்கள் உணர்வை தூண்டிவிட்டு விளையாடுவது போன்று அமைத்திருந்தது சத்தியராஜ் கடந்த கால பேச்சு என்றே சொல்லலாம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காவேரி பிரச்னையின் போது தமிழ் சினிமா துறையினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், இங்கு யாருடைய பெயரைச் சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். என மேடையில் இருந்த நடிகர் ரஜினிகாந்தை தான் மறைமுகமாக சுட்டி காட்டுகிறார் என்பது வெட்ட வெளிச்சமானது.

தொடர்ந்து அந்த மேடையில் பேசிய சத்யராஜ் கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன் என தெரிவித்த சத்யராஜ் அந்த மேடையில் உச்சகட்டமாக என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன். உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.

ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ….அவ்வளவுதான் என சத்யராஜ் அப்போது பேசிய இந்த பேச்சு ஏற்கனவே தமிழ்நாடு – கர்நாடக இடையில் நடந்து வந்த பிரச்சனையில் மேலும் ஒரு பதற்றத்தை உருவாக்கியது.

இதனால் சத்யராஜ் நடித்த படம் கர்நாடகாவில் திரையிடகூடாது என எதிர்ப்பு கிளம்பிய போது, வருத்தம் தெரிவித்து பின் அவர் படம் ஓடியதெல்லாம் தனி கதை. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் உள்ள புகுந்து கன்னட அமைப்பினர் செய்த ரகளை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும், இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் செயல்பட்டுள்ளார் கன்னட நடிகர் சிவராஜ்.

இந்த விவகாரம் குறித்து சிவராஜ் தெரிவிக்கையில், காவிரி நீர் விவகாரத்தில் தார்மீக அடிப்படையிலும், விவசாயத்தை கருத்தில் கொண்டும் நீர் வேண்டும் என நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டம் நியாயமானது. ஆனால் அதேநேரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கன்னட மக்கள் மிகவும் நல்லவர்கள். மதம், இனம், மொழி மற்றும் மாநிலங்களை கடந்து சினிமாவை ரசிக்கக் கூடியவர்கள்தான் கர்நாடக மக்கள் “ என சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு எதிராக தமிழக நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தூண்டிவிடும் நிலையில் தமிழ் திரையுகத்தினர் அமைதி காத்து வருவது பாராட்டும் படி அமித்துள்ளது, அதே நேரத்தில் யாரோ ஒரு சிலர் கன்னட அமைப்பினர் செய்த தவறான செயலுக்காக இரண்டு மாநிலகளுக்கு இடையில் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்காமல்.

குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் காவேரி விவகாரத்தில் உணர்வுகளை தூண்டிவிட்டு இரு மாநில மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்காமல், பெருத்தமையோடு கன்னட நடிகர் சிவராஜ் மன்னிப்பு கேட்டுள்ளது, காவேரி விவகாரத்தில் இரண்டு மாநில மக்கள் இடையே நட்பை பாராட்டும் வகையில் அமித்துள்ளது, அந்த வகையில் உணர்ச்சியை தூண்டிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு தக்க பதிலடியாக அமைத்துள்ளார் கன்னட நடிகர் சிவராஜ் மன்னிப்பு கேட்டுள்ளது.