விடிய விடிய நடிகையுடன் மேட்ச் ஆடிய நடிகர்கள்! ஹேமா கமிட்டியில் சிக்கும் நடிகர்கள்!

0
Follow on Google News

கிரிக்கெட் பிரிமியர் லீக் மேட்ச் ஆடுவதாக கூறி விடிய விடிய நடிகையுடன் பெட்மேட்ச் விளையாடிய நடிகர்கள் லிஸ்ட் வெளியாகி திரையுலையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மலையாளத் திரையுலகை ஆட்டம் காண வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு, மழுப்பலான பதிலளித்து நழுவுகின்றனர் தமிழ் நடிகர்கள்… மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி பற்ற வைத்த நெருப்பு, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் வரை எதிரொலித்துள்ளது…

அந்த வகையில் நடிகர்கள் செல்லுமிடமெல்லாம், அவர்களை துரத்துகிறது ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான கேள்விகள்… அதிலும், நடிகைகள் ஒவ்வொருவராக தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வர…இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகை சேர்ந்த நடிகர்களுக்கும் இக்கேள்விகள் முன்வைக்கப்படுகின்றது. அதற்கு நடிகர்கள் கழுவுற மீனில் நழுவும் மீனைப் போலவே மழுப்பலான பதில் அளிக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜீவாவிடமும் நிருபர்கள் ஹேமா கமிட்டி குறித்து கேட்டதும் ஜீவா நிருபர்களிடம் கோவப்பட்டு வெளியேறியிருந்தார். சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டி, அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் அளித்து தெலுங்கு திரை உலகை ஆட்டம் காண வைத்த ஸ்ரீ ரெட்டி சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அளித்து தமிழ் சினிமாவிலும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.

அந்த லிஸ்டில் நடிகர் ஜீவா, விஷால், ஸ்ரீகாந்த், மற்றும் இயக்குனர் Ar முருகதாஸ், சுந்தர் சி ஆகியோர் இடம்பெற்றிருந்தது தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் தள்ளியிருந்தது. முன்பு ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி. எப்படி இருக்கீங்க… கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள்.

என்னை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டீர்கள். ஆனால், இன்னும் நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. நீங்கள் எப்போதும் நல்ல மனிதர்” என பதிவு செய்திருந்தது தமிழ் சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கி ரசிகர்களையும், திரைஉலகினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. மேலும், ஹைதராபாத்தில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடந்த போது பார்ட்டி கொண்டாடியது நினைவிருக்கிறதா என்று நடிகர் ஸ்ரீகாந்தையும் கேட்டிருந்தார்.

அதோடு, அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்திருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் கூட தன்னை யார் என்று தெரியாது என கூறிய நடிகர் விஷாலுக்கு செருப்பை காட்டி பதிலடி கொடுத்திருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், தமிழ் திரையுலகில் புதைந்து கிடந்த பல பாலியல் புகார்கள் வெளி வர தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவிலும் இது போன்ற கமிட்டி அமைத்தால் பல முக்கிய பிரபலங்கள் சிக்குவது உறுதி என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

அந்த வகையில் தமிழ் திரை துறையை சார்ந்தவர்கள் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி பகிரகமாக பல குற்றசாட்டுகளை வைத்தார், மேலும் பின்னணி பாடகி ஒருவர் பகிரங்கமாக மீ டூ சர்ச்சையின் போது பகிரகமாக தமிழ் சினிமா துறையில் இருக்கும் முக்கிய பிரபலம் மீது பகிரங்கமாக குற்றசாட்டுகளை வைத்தவர், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களை வெளிச்சம் போட்டு காண்பித்தார். அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் ஒரு கமிட்டி அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்று தரவேண்டும் என்கிற குரல் ஒலிக்க தொடக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here