அஜித் – விஜய் இருவரின் ஜாதகத்திலும் ஒரே பிரச்சனை.. துணிவு – வாரிசு மோதல் குறித்த சுவாரசிய தகவல்..

0
Follow on Google News

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வாரிசு, மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படத்தின் டிரைலர்கள் சமீபத்தில் வெளியான நிலையில் வாரிசு படத்தின் டிரைலரின் சாதனையை முறியடித்துள்ளது துணிவு படம். அந்த வகையில் ட்ரெய்லரில் நடந்த போட்டியில் துணிவு வெற்றி பெற்றுள்ளது.

முதலில் வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதியும் துணிவு படம் அதற்கு முதல் நாள் ஜனவரி 11ஆம் தேதியும் வெளியாகுவதாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாள் வாரிசு படம் வெளியானால் இரண்டு படத்திற்கான மொத்த வசூல் தொகையில் வாரிசு படம் குறைவாக இருக்கும், இதனால் விஜய் நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கான வியாபாரம் மிகப்பெரிய அளவில் சரி சந்திக்கும்

இதை அறிந்த வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெற்றுள்ள லலித் துணிவு வெளியாகும் அதே தேதியில் வாரிசு படத்தையும் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளார். இதில் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு விருப்பம் இல்லை என்றாலும் கூட, விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லலித் தயாரிக்க இருப்பதால் தன்னுடைய அடுத்த படத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக துணிவு வெளியாகும் அதே தேதியில் வாரிசே வெளியிட முடிவு செய்துள்ளார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.இரண்டு படமும் ஒரே தேதியில் வெளியாக இருப்பதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கான மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இது குறித்து ஜோதிடர் ஒருவர் கூறுகையில், அஜித் மற்றும் விஜய் இருவரும் கடக ராசி, பூசனா நட்சத்திரம் என்றும், இருவருக்கும் சுக்கிர திசை நடந்து வருவது மேலும் ஜனவரி 11ஆம் தேதி இவர்கள் இருவரின் ராசிக்கும் போட்டி ஏற்படும் என்று ஜாதகத்தில் குறிப்பிட்டது, அதனால் இவர்கள் இருவருக்கும் நடக்கும் போட்டியை ஜாதகப்படி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்

நாட்டமை படம் டீச்சர் பாணியில் அண்ணாமலையை வீழ்த்த போட்ட திட்டம்… சிக்காமல் தப்பித்தது எப்படி.?