எங்க பணத்தை திருப்பி கொடுங்க… கண்ணீர் விட்டு கதறி பெண்… விஷால் செய்த மிகப்பெரிய தவறு..

0
Follow on Google News

நடிங்கர் சங்க தேர்தலில் நடிகர் சரத்குமார் எதிராக விஷால் அணி போட்டியிட்ட போது, இந்த அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ், ஆனால் தேர்தல் முடிந்து அடுத்த சில மாதங்களில் மலேசியாவில் நடந்த சினிமா கலைநிகழ்ச்சிகளில் நடிகர் விஷால் முறைகேடு செய்துள்ளதாக வெளிப்படையாக தெரிவித்து விஷாலை விட்டு விலகினார் ஜெ.கே.ரித்தீஷ்.

அதே போன்று விஷாலை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நடிகை வரலக்ஷ்மி தனது காதலை முறித்து கொண்டு விஷாலை விட்டு பிரிந்தார். இதன் பின்பு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் மகளுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தம் பாதியிலே நின்றது, இந்நிலையில் சொந்தமாக படம் தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்த விஷால், கடன் வாங்கியவர்களிடம் நாணயமாக நடந்து கொள்வதில்லை,

ஒரு சில படங்களில் அட்வான்ஸ் வாங்கி கொண்டு அந்த தயாரிப்பாளர் படத்தில் நடிக்க முன் வருவதில்லை என விஷாலின் பெயர் பஞ்சராகி வந்தது. மேலும் மதுரை அன்புசெழியனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த விஷால், பின்பு லைக்கா நிறுவனத்திடம் அவருடைய புதிய படம் தொடர்பாக சில ஒப்பந்தம் செய்து கொண்டு. லைக்காவிடம் பணத்தை பெற்று அன்புசெழியன் கடனை அடைத்தார்.

ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தம் படி அவர் நடக்கவில்லை. இதனை தொடர்ந்து விஷால் மீது லைக்கா நிறுவனம் கேஸ் போட்டது. இப்படி தொடர்ந்து நாணயம் இல்லாமல் நடந்து வரும் விஷால் இறந்தவர் ஒருவர் பணத்தை ஏப்பம் விடும் சம்பம் அரங்கேறியது. நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான படம் சின்னத்தம்பி. இந்த படத்தின் தயாரிப்பாளர் பாலு.

இவர் கொரோனா தொற்று காரணமாக மறைந்துவிட்டார். இவர் மறைவதற்கு முன்பு நடிகர் விஷால் வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அப்போது விஷால் தனக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிவித்து படம் தொடங்குவதற்கு முன்பே பணம் கேட்டுள்ளார். படத்தில் நடிக்கும் போது வாங்கிய தொகையை கழித்து கொள்ளலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகர் விஷாலுக்கு ரூபாய் 7 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பாலு. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக பாலு மரணம் அடைத்தார். இதனை தொடர்ந்து பாலு தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்து அவர் குடுப்பத்திற்கு நல்ல லாபத்தை பெற்று தருவேன் என நடிகர் விஷால் உறுதியளித்தார். ஆனால் அதற்கான வேலைகளில் அவர் தொடங்கவில்லை.

மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி தன்னுடைய கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி விஷாலிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. இதனால் தன்னுடைய கணவர் பாலுவிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்து வந்த விஷால் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்த சம்பவமும் உண்டு.

இப்படி சினிமாவில் கிடு கிடுவன வளர்ந்த விஷால், ஒரு கட்டத்தில் நாணயம் இல்லாமல் நடந்து கொண்டதின் காரணமாக, சினிமா துறையினர் மத்தியில் கடும் எதிப்புக்கு உள்ளாகி அதிக பகையை சினிமா துறையில் உருவாக்கி கொண்டார். இந்த நிலையில் தற்பொழுது உடல் நிலை சரியில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விஷால், விரைவில் குணம் அடைந்து இனி வரும் காலங்களில் அவர் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here