நெல்சன் வேண்டாம்… ரஜினியை எச்சரித்த விஜயின் தந்தை..! வெளிப்படையாக என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ள படம் பீஸ்ட், இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமாரை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சினிமா விமர்சகர்கள், நெல்சன் ஒரு காமெடி பட இயக்குனர், அவருக்கு மாஸ் ஹீரோக்கள் வாய்ப்பு கொடுத்து மாஸ் படம் எடுக்க சொன்னால் அவர் எப்படி எடுப்பார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

மேலும் பீஸ்ட் படம் படுதோல்வி அடைத்துள்ளதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார், இந்நிலையில் பீஸ்ட் பட தோல்விக்கு பின்பு ரஜினியின் புதிய படத்தில் இருந்து நெல்சன் மற்ற படுகிறார் என்கிற தகவல் வெளியானது. ஆனால் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை எச்சரிக்கு விதத்தில் விஜய் தந்தை SA சந்திரசேகர் பேசியுள்ளார்.

தனது மகன் நடித்த படம் என்று கூட பாராமல் பீஸ்ட் படத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய SA சந்திரசேகர், ஒரு மால் ஹைஜாக் பண்ணி வைத்துள்ளார்கள். அது சீரியசான காட்சிகள் அதனால் பாடம் வைக்கவில்லை என்று கூறுகிறார்கள், அப்படியானால் அதில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளது ஏன்.? படத்தின் திரைக்கதையை வடிவமைப்பதில் இயக்குனரின் கையில் தான் அந்த மேஜிக் இருக்கு.

ஐஎஸ் தீவிரவாதி என்றால் சும்மா ஊருக்குள்ள கொள்ளையடிக்கிறவன் கிடையாது, அதி பயங்கரவாதிகள், மேலும் இந்த படம் இந்தியாவின் உளவு அமைப்பான ரா தொடர்பான கதை, இப்படியான கதைகளை எடுக்கும்போது ஒரு ரா ஏஜன்ட் என்றால் என்ன.? ராணுவம் என்றால் என்ன.? என்பதை அந்தப் படத்தின் இயக்குனர் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஹீரோ கிடைத்து விட்டார் என்பதற்காக உடனே படப்பிடிப்புக்கு செல்லக்கூடாது.

அதைத்தான் நான் சொல்கின்றேன், இயக்குனரிடம் திறமை வேண்டும், திரைக்கதை தான் அந்த படத்தை பார்ப்பவனை கட்டிப்போடும். ஒரு படத்தின் கதையை ஒரு லைனில் சொல்லி ஹீரோவை ஓகே செய்து விடுவார்கள். ஆனால் படத்தின் திரைக்கதை தான் அந்தப் படத்திற்கு வெற்றியை தேடித்தரும். பீஸ்ட் படத்தில் நான் பார்த்தது வெளிப்படையாகச் சொல்கிறேன். படம் ஓடும் நல்ல வசூலை பெறும் அதில் என்ற மாற்றுக் கருத்தும் இல்லை.

நான் படத்தை பார்த்த வரை பீஸ்ட் படத்தில் ஒரு இசை அமைப்பாளர் உள்ளார், ஒரு சண்டை மாஸ்டர் உள்ளார், ஒரு டான்ஸ் மாஸ்டர் இருக்கிறார், எடிட்டர் இருக்கின்றார், ஒரு ஹீரோ இருக்கிறார், எத்தனை பேர் இருக்கிறார்கள் என தெரிவித்து சில நிமிடம் அமைதியாக இருந்த SA சந்திரசேகர், ஆனால் இந்த படத்தின் இயக்குனர் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் எஸ் ஏ சந்திரசேகர் என்றும் மேலும் இவரின் இந்த பேச்சு நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

நன்றி மறந்த ரஜினிகாந்த்… நடுதெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..! அஜித்தை பார்த்து கற்று கொள்வாரா ரஜினி.?