விஜயகாந்தின் அசூர வளர்ச்சி… கிடு கிடுவென சரிந்த சிவகுமார் செல்வாக்கு… தலைகீழாக மாறிய சிவகுமார் சினிமா வாழ்க்கை..

0
Follow on Google News

விஜயகாந்த் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரம்.. அந்த காலகட்டங்களில் சிவகுமார் முன்னனி நடிகராக பிசியாக நடித்து கொண்டிருந்த காலம்.. வருடத்துக்கு பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் சிறு தயாரிப்பாளர்களின் ஆதர்சநாயகன் சிவகுமார். கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிய விஜயகாந்த்தை எம்.ஏ.காஜா இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக்கினார். விஜயராஜ் விஜயகாந்தானார்.

ஆனாலும் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. சாமந்திப்பூ’ என்கிற படத்தில் விஜயகாந்துக்கு 1980ல் ஒரு சிறு வேடம் கிடைத்தது. அந்த படத்தின் நாயகன் சிவகுமார், நாயகி ஷோபா. ஷோபாவை காதலிக்கும் இரண்டாவது நாயகன் விஜயகாந்த். அது தான் விஜயகாந்த் சிவகுமார் உடன் இணைந்து நடித்த முதல்படம். விஜயகாந்துக்கு அதிக காட்சிகள் கிடையாது. இரு லெஜண்ட்கள் சிவகுமார்-ஷோபாவுக்கிடைய விஜயகாந்தும் வந்து போனார். இதே படத்தில் சத்யராஜும் சிறு வேடத்தில் வந்து போனார். டைட்டிலில் சத்யராஜ் பெயர் ஐந்து பேரில் ஒரு ஆளாக இடம் பெற்றிருக்கும்.

விஜயகாந்தின் பெயர் பத்து பேர் பெயர்கள் லிஸ்ட்டில் ஒரு ஓரமாக இருக்கும். விஜயகாந்துக்கு என்றாவது தான் பெரிய ஆளாகிவிடுவோம் என நம்பிக்கை இருந்தது. ஆனால் சிவகுமார் செய்யும் நடிப்பு வித்தையெல்லாம் செய்ய முடியுமா, கிடைக்குமா என ஏங்கிய நேரம். அட்லீஸ்ட் அவருக்கு இணையான நாயகனாகவாவது கிடைக்குமா? என ஏங்கிய விஜயகாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு ஐந்து வருடம் உழைப்பைக்கொட்ட வேண்டி இருந்தது. 1985ல் விஜயகாந்த்-சந்திரசேகர் கூட்டணி புகுந்து விளையாடிக்கொண்டிருந்த நேரம். விஜயகாந்தும், எஸ்.ஏ.சியும் இணைந்த படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. எஸ்.ஏ.சி என்றால் உடனே கால்ஷீட் கொடுக்கும் விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சியின் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு ஒரு கட்டத்தில் பிஸியானார்.

சட்டத்தை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த எஸ்.ஏ.சி தனது ‘புதுயுகம்’ படத்தில் விஜயகாந்தின் கால்ஷீட் பிரச்சினையால் சிவகுமாரை நடிக்க வைத்தார். சிவகுமாருக்கு தனி மார்க்கெட் இருந்தாலும் விஜயகாந்த் வந்தால் தன் படத்துக்கு ‘C’ சென்டர்களில் வரவேற்பு எகிறும் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சி, சிவகுமாரின் நண்பனாக விஜயகாந்தை நடிக்க வைத்தார்.

ஐந்து வருடத்துக்கு முன் சிவகுமார் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய விஜயகாந்த். அடுத்து சிவகுமாரின் படத்தை தூக்கி நிறுத்த விஜயகாந்த் தேவைப்படும் அளவுக்கு வளர ஐந்து வருடம் தேவைப்பட்டது. 1985க்கு பிறகு இணைந்து நடித்த சிவகுமார்-விஜய்காந்தின் ‘புதுயுகம்’ படத்துக்குப்பின் சிவகுமாரின் கண்முன்னே விஜயகாந்த் வாமணாவதாரம் எடுத்தார். பதினான்கு வருடங்களுக்குப்பின் விஜயகாந்த் சிவகுமாரின் மகன் சூர்யாவுக்கு உதவும் அளவுக்கு உயர்ந்தார்.

விஜயகாந்தின் பல வருட உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையா என்கிற ஏழையை உயர்த்த நினைத்த விஜயகாந்த் அவரை தயாரிப்பாளராக்கி ஒரு படம் நடிக்க விரும்பினார். தனது குரு எஸ்.ஏ.சியிடம் சொல்ல அவரும் வளர்ந்து வரும் தன் மகன் விஜய்யையும் சேர்த்து நடிக்கும் விதத்தில் ‘பெரியண்ணா’ கதையை உருவாக்கினார். இளசுகளின் துள்ளலுக்காக விஜய் பாத்திரத்துக்கான பாடல்களை புதிய இசையமைப்பாளர் பரணியின் எழுத்திலும், இசையிலும் விஜய்யே பாடினார். ‘நான் தம்மடிக்கிற ஸ்டைலைப்பாத்து’ பாடல் செம ஹிட்டானது.

படப்பிடிப்பு துவங்கும் போது விஜய் தொடர் ஹிட்டுகளால் பெரிய தனி நாயகனாக மாறி இருந்தார். அவரால் பெரியண்ணாவில் நடிக்க முடியவில்லை. விஜய்யின் ரோலை செய்ய இளம் நாயகன் யாரைப் போடலாம் என விவாதம் ஓடிக்கொண்டிருக்க தயாரிப்பாளர் விஜய்காந்த் தன் ஆதர்ச நாயகன் சிவகுமாரின் மகன் சூர்யா அறிமுகமாகி படங்களின்றி தடுமாறிக்கொண்டிருந்ததை அறிந்து சூர்யாவின் பெயரை பரிந்துரைத்தார்.

விஜய்காந்தோடு நடித்து வெற்றி நாயகனாக விஜய் வந்தது போல் சூர்யாவும் வர வேண்டுமென விஜயகாந்த் விரும்பி பெரியண்ணாவில் சூர்யாவை அழைத்தார். அவர் ராசி பொய்க்கவில்லை. சூர்யா இன்று பெரிய நாயகனாகிவிட்டார்.அடுத்த விஜய்காந்த் படமான ‘கண்ணுப்பட போகுதைய்யா’ படத்தில் சிவகுமாரை விஜய்காந்தின் தந்தை ரோலில் நடிக்க ஒப்புதலளித்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தை மனதார புகழும் வசனத்தை சிவகுமாரும் அந்தப்படத்தில் பேசி நடிக்கும் வாய்ப்பும் வர சிவகுமாரும் அழகாக பேசினார். காலம் தான் எப்படி இருவரின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது பாருங்கள். வாழ்க்கை ஒரு சக்கரம் மாதிரி எனச் சொல்வது மிகச்சரியே…அந்த சக்கரம் விஜய்காந்த் வாழ்வில் ஓடி நின்று விட்டல்,.. அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.