குண்டா சட்டிக்குள் குதிரை ஓட்டும் ரஜினி, விஜய்…. அண்ணார்ந்து பார்க்க வைத்த பீட்டர் ஹெய்ன்…

0
Follow on Google News

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் புதுச்சேரியில் காரைக்கால் திருநள்ளாரில் பிறந்த அவரது தந்தை பெருமாள் தமிழ்த் திரையுலகில் உதவி சண்டை மாஸ்டராக இருந்தவர், மற்றும் அவரது தாயார் விவரங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும். பீட்டர் ஹெய்ன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களுக்கு கூடுதல் ஃபைட்டர் மற்றும் உதவி சண்டை மாஸ்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், ஆரம்பத்தில், ஸ்டாண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் , விஜயன் போன்ற பிரபல ஸ்டாண்ட் இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார் பீட்டர் ஹெய்ன்.

ஆரம்பத்தில் ஸ்டாண்ட் மாஸ்டருக்கு உதவியாளராக இருந்த பீட்டர் ஹெய்ன் உயிரை பணயம் வைத்து நடிகர்களுக்கு டூப் போட்டது இன்றளவு அந்த காட்சிகள் பேசப்பட்டு வருகிறது, முதல்வன் படத்தில் உடலில் தீப்பற்றி எரிய, உடம்பில் ஒட்டு துணியில்லாமல், சாக்கடையில் அர்ஜுன் குதிக்கும் கட்சிக்கு டூப் போட்ட பீட்டர் ஹெய்னுக்கு உடலில் பெரும் பகுதி தீ காயத்துக்கு உள்ளானது, மேலும் பல முறை சண்டை கட்சியின் போது பீட்டர் ஹெய்ன் எலும்பு உடைந்து அந்த எலும்பை இணைக்கும் ஸ்குரு இன்னும் அவருடைய உடலில் இருக்கிறது.

உதவியாளராக, டூப் மேன் ஆக இருந்த பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக 2001 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய “ மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில், கிருஷ்ண வம்சியின் தெலுங்குத் திரைப்படமான “ முராரி ” யில் பணியாற்றினார், இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு,தமிழ் தெலுங்கு , ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிஸியான பீட்டர் ஹெய்ன், இந்தியாவின் பிரமாண்ட படங்களான பாகுபலி, சிவாஜி, அந்நியன், RRR போன்ற மெகா ஹிட் படங்களின் தவிர்க்க முடியாத ஸ்டாண்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.

இன்று தமிழ் சினிமாவில் முக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்களான அனல் அரசு , சில்வா , அன்பரிவு, ஹரி தினேஷ், பிரதீப் தினேஷ் போன்றோர் பீட்டர் ஹெய்னிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள். இந்நிலையில் ஸ்டாண்ட் மாஸ்டராக இருந்த பீட்டர் ஹெய்ன், உலக முழுவதும் புகழ் பெரும் அளவில், இதுவரை தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலும் கூட யாரும் எட்ட முடியாத உயரத்துக்கு செல்ல இருக்கிறார்.

ஆம் காட்டுவாசியாக முழுக்க முழுக்க ஆக்சன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஹாலிவுட் படம் என்றதும், பீட்டர் ஹெய்னை வைத்து படம் எடுக்க போவது, ஹாலிவுட் இயக்குனர், ஹாலிவுட் தயாரிப்பாளர் என்று நினைக்க வேண்டாம், அழப்போறன் தமிழன் உலகம் எல்லாமே என்று சொல்வது போன்று, இந்த ஹாலிவுட் படத்தை இயக்குனர் வெற்றி இயக்குகிறார், பிரமாண்டமாக எடுக்கப்படும் இந்த படத்தை ட்ரென்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர், எம். டி சினிமாஸ் சார்பில் ஏ.எம்.சவுத்ரி ஆகியோர் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இதில் தயாரிப்பாளரான ஜெ.எம்.பஷீர் விரைவில் திரைக்கு வர இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறான தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ளார். பீட்டர் ஹெய்ன் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படத்தை OTTயில் வெளியிட பல முன்னனி நிறுவனங்கள் தயாரிப்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 30 வருடங்களாக தன் உயிரை பணயம் வைத்து ஸ்டாண்ட் கலைஞராக பணியாற்றிய பீட்டர் ஹெய்ன் திறமையை உலக அறிய செய்வது மட்டுமில்லாமல், தமிழர்கள் ஹாலிவுட் சினிமாவில் வெற்றி கொடி நாட்டும் வகையில் பீட்டர் ஹெய்ன் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் பீட்டர் ஹெய்ன் ஹாலிவுட்டில் நிச்சயம் தடம் பதிப்பார் என ஒவ்வொரு தமிழர்களும் வாழ்த்துக்களை பதிவு செய்வோம்.