நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க மாட்டார்கள்… பின்னணியில் பிரபல சினிமா குடும்பம்…

0
Follow on Google News

கடனில் தத்தளித்த கொண்டிருந்த நடிகர் சங்கத்தை வழி நடந்த முடியாமல் நடிகர் சங்கம் தலைவராக இருந்த ராதாரவி தத்தளித்து வந்த காலம் அது. நடிகர் சங்கமே கடனில் தத்தளித்து கொண்டிருக்கும் போது, துணை நடிகர்கள் படும் கஷ்டத்தை யார் தீர்ப்பது, என பல கேள்விகளுடன், சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பல துணை நடிகர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து காலம் என்றே சொல்லும்படி இருந்த போது நடிகர் சங்கம் தலைவராக பொறுப்பேற்றார் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக வருவதற்கு முன்பு, கேட்பாரற்று கிடந்த நடிகர் சங்க கடனை அடைந்து, பல துணை நடிகர்கள், மற்றும் சினிமா சார்த்த குடும்பங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி ஏற்றி வைத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என முடிவெடுத்த போது, அரசியல் கட்சி தலைவர், நடிகர் சங்க தலைவர் என ஒரே நேரத்தில் இரண்டிலும் சவாரி செய்வது சரியாக இருக்காது என்பதால், தன்னுடைய நடிகர் சங்க தலைவர் பொறுப்பை பெரும் தன்மையாக சரத்குமார் கையில் ஒப்படைத்துவிட்டு சென்றார்.

சரத்குமார் தலைமையில் இயக்கி வந்த நடிகர் சங்கத்தை கைப்பற்ற உருவானது விஷால், நாசர், கார்த்திக் தலைமையில் பாண்டவர் அணி, ஆனால் இந்த அணிக்கு பின்னணியில் இருந்து முழுக்க முழுக்க செயல்பட்டது சிவகுமார் குடும்பத்தினர் தான் என்றும், குறிப்பாக நடிகர் சங்கத்தை தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளவே விஷாலை முன்னிறுத்தி தங்கள் குடும்ப உறுப்பினர் கார்த்தியை களத்தில் இறக்கிவிட்டு பின்னால் இருந்து நடிகர் சிவகுமார் , சூர்யா ஆகிய மொத்த குடும்பமும் இயங்கிதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

மேலும் நடிகர் சங்கத்தை சரத்குமாரிடம் இருந்து விஷால், நாசர், கார்த்திக் தலைமையிலான அணி கைப்பற்றிய பின்பு நடிகர் சங்கம் தற்பொழுது வரை சிவகுமார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது என்கிற விமர்சனமும் உண்டு. என்ன தான் நடிகர் சங்கத்தை கைப்பற்றினாலும், கேப்டன் போன்று வர முடியுமா.? சினிமா துறையினர் மத்தியில் இருக்கும் பல பிரச்சனைகள் தீர்வு காண முடியவில்லை, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் பாதியுடன் நிற்கிறது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மரணம் அடைந்த போது, அவருடைய உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாமல் சினிமா துறையை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நியூ இயர் கொண்டாட்டத்தில் பிசியாக இருந்தனர். அதே நேரத்தில் சினிமா துறையினர் சிலர் விஜயகாந்த் செய்த நன்றியை மறந்து இருக்கலாம், நாங்கள் மறக்க மாட்டோம் என சுமார் 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது, விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத நடிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது,

மேலும் சிவகுமார் குடும்பத்தில் இருந்து, சிவகுமார், கார்த்திக், சூர்யா என யாருமே நேரில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாது மக்கள் மத்தியில் கடும் கோபத்துக்கு உள்ளானது. இந்நிலையில், விஜயகாந்த் மறைந்தாலும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து, மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க நியூ இயர் கொண்டாட்டத்தை முடிந்து விட்டு விஜயகாந்த் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள் சினிமா துறையினர்.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சங்கம் கட்டி வரும் புதிய கட்டிடத்திற்கு தமிழக மக்களும், பெரும்பாலான சினிமா துறையை சேர்ந்தவர்களும் கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்க கூடிய விஷால், நாசர், கார்த்திக் உட்பட அனைவரும் பூசி முழுகி வருவது, விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கத்திற்கு வைப்போம் என சொல்வதில் ஏன் தயக்கம், ஒரு வேலை நடிகர் சங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிவகுமார் குடும்பத்தினர் நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு விருப்பம் இல்லாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார்களா என்கிற சந்தேகம் உள்ளது என மக்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.