விஜயகாந்தை அடியோடு காலி செய்ய நடந்த சூழ்ச்சி…. மீடியா பின்னணி சூழ்ச்சி…

0
Follow on Google News

உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்த கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் பல சாதனைகள் புரிந்து மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே, கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கின்ற பெயரில் கட்சியை மிக பிரம்மாண்டமாக தொடங்கி மக்கள் மத்தியில் மாற்றத்தை விரும்பும் வகையில் எழுச்சியை உருவாக்கினார்.

திமுகவுடன் கூட்டணி வைப்பாரா.? இல்லை அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா.? என்று விஜயகாந்த் கட்சி தொடங்கிய அடுத்த ஒரு வருடத்திற்குள் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு கட்சிகளுடன் நான் கூட்டணி இல்லை, ஆண்டவனுடன் மக்களுடன் தான் கூட்டணி என தனித்து போட்டியிட்டு தனக்கான பெரும் வாக்கு வங்கியை நிரூபித்தது, மட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சட்டசபைகளும் நுழைந்தார்.

இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு அதிமுகவின் பெரும்பான்மையான வாக்குகளை பிரித்தது தான். அதே நேரத்தில் திமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் துணையுடன் தான் ஆட்சி அமைத்தது, அந்த அளவுக்கு 2006 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இரண்டு கட்சிகள் வயிற்றிலும் புளியை கரைத்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் 2011 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் வழக்கம் போல் தனித்துப் போட்டியிட்டால் மீண்டும் அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வந்திருக்காது. அந்த வகையில் அதிமுக சார்ந்த முக்கிய புள்ளிகளும் அதிமுகவுடன் இருந்த கூட்டணி கட்சி தலைவர்களும் விஜயகாந்த் வீட்டிற்கு படையெடுத்தனர். தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திமுகவின் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விஜயகாந்தை கேட்டுக் கொண்டனர்.

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு துணையாக இருந்தார். ஆனால் வழக்கம் போல் ஜெயலலிதாவை பார்த்து கூழை கும்பிடு போடும் கூண் பாண்டிகள் போன்று இல்லாமல் , தன்னுடைய தன்மானத்தை ஜெயலலிதா உடன் கூட்டணி அமைத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் விஜயகாந்த்.

சட்டசபையில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட எதிர்க்கட்சியாக இருந்த விஜயகாந்த் அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத போக்கையும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளையும் சட்டசபையிலே கடுமையாக மக்களுக்காக கேள்வி எழுப்பியதின் விளைவு ஜெயலலிதாவின் கோபத்துக்கு உள்ளானார் விஜயகாந்த்.

2011ல் அதிமுக ஆட்சியில் இருக்க காரணம் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்தது தான், இல்லை என்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்கின்ற சிறிதும் நன்றியில்லாத ஜெயலலிதா தன்னை எதிர்த்த விஜயகாந்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு சில சதி திட்டங்களை வகுத்தார் விஜயகாந்த், முதல்வராக ஆளுமை மிக்க தமிழ்நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயலலிதா மீடியாவை மட்டும் என்ன சுதந்திரமாகவா செயல்பட விட்டு இருப்பார், நிச்சயம் கிடையாது.

விஜயகாந்தை தொடர்ந்து ஒரு கேலி சித்திரமாக மக்கள் மத்தியில் காண்பிக்க ஜெயலலிதா தரப்பிலிருந்து மீடியாவுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் தான் ஒட்டுமொத்த மீடியாவும் சிங்கம்போல் இருந்த விஜயகாந்தை கேலி கிண்டல் ஆக்குவது போன்று செய்திகளை வெளியிட்டு தங்களின் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் காண்பித்தார்கள்.

அடுத்து 2016 சட்டசபை தேர்தலில் கூட்டணிக்காக விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து காத்திருந்தார் கருணாநிதி. 2016 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் அதிமுக தோல்வியை சந்திக்கும். இதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா, திமுக பக்கம் எந்த காரணத்திற்காகவும் விஜயகாந்த் சென்று விட கூடாது என்பதற்காக, ஜெயலலிதாவின் அரசியல் தந்திரங்களில் ஒன்றுதான் வைகோவால் உருவாக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி.

வைகோவுக்கு ஜெயலலிதா தரப்பில் இருந்து கொடுத்த அசைன்மென்ட் படி மக்கள் நல கூட்டணி என்கின்ற ஒரு கூட்டணியை உருவாக்கி நீங்கள் தான் அடுத்த முதல்வர் என விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒட்டுமொத்தமாக அந்தத் தேர்தலுடன் விஜயகாந்த் அரசியலை வீழ்ச்சி அடைய செய்தது. விஜயகாந்த் துணையுடன் 2011 ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, 2016ல் விஜயகாந்த் திமுக பக்கம் போயிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது. இப்படி விஜயகாந்தாய் வைத்து அரசியலில் சதுரங்க வேட்டை விளையாடிய ஜெயலலிதா, விஜயகாந்தை அரசியலில் இருந்து வீழ்த்துவதர்க்கும் மிகப்பெரிய சூழ்ச்சியில் ஓன்று தான் மீடியாக்களை துணையுடன் விஜயகாந்தை வீழ்த்தியது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.