இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கே, என தான் வாழ்நாள் முழுவது ஏழைகளுக்கு அள்ளி அல்லி கொடுத்துவிட்டு வாழ்ந்து மறைந்துள்ள கேப்டன் விஜயகாந்த். மரணம் அடைந்து நாட்கள் கடந்தாலும் இன்னும் மக்கள் சோகத்தில் இருந்து மீண்டு வரவில்லை. யாருடைய வெறுப்பையும் சம்பாதிக்காத விஜயகாந்த் இருக்கும் போது செய்த நன்மைகளில் வெளியில் தெரிந்தது கொஞ்சம்தான்.
ஆனால் அவர் மரணத்திற்கு பிறகு நிறைய பேர் கேப்டன் எனக்கு அதை செய்தார், இதை செய்தார் என கூறி வருவதை பார்க்கும் போது உழைத்து சம்பாதித்த காசில் இத்தனை அளவுக்கு செய்துள்ளாரே என மிரள வைக்கிறது. கேப்டன் மரணம் அடைந்த போது அவரது உடல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
அப்போது, விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்து சென்ற போது கருடன் வானில் 3 முறை வட்டமிட்டது. இதைப்பார்த்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் உட்பட அங்கிருந்த மொத்த கூட்டமும் கருடனை கைகூப்பி வணங்கினர். இந்த காட்சிகாண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
இதையடுத்து, கேப்டன் விஜயகாந்தின் 16வது நாள் காரியம் சமீபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 16ம் துக்கத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும், நீண்ட வரிசையில் நின்று அங்கு அலங்கரித்துத் வைக்கப்பட்டிருந்த, விஜயகாந்த் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
அங்கு வந்திருந்தவர்களுக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள். அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டதைப் பார்த்த பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் நெகிழ்ந்து கை கூப்பி வணங்கினார்கள். இதைப்பார்த்த அங்கு கூடி இருந்த பொது மக்கள் விஜயகாந்த் அவர்களே, கருடன் ரூபத்தில் காட்சி அளித்து இருக்கிறார் என்று நெகிழ்ந்து போனார்கள்.
இன்னும் சிலர் கேப்டன் இறக்கவில்லை அவர் எப்பவும் இவ்வுலகிலுள்ள அனைத்து மக்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருடன் வட்டமிடுவது ஏன்? பொதுவாக கருடன் கும்பாபிஷேகம் மற்றும் ஆன்மிகவாதிகளின் மரணங்களின் போது வட்டமிடும்.
இது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வாகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு விஜயகாந்துக்கு நடந்துள்ளதை வைத்து பார்க்கும் போது அவர் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. கள்ளழகர் படத்தில் நடித்த விஜயகாந்துக்கு ஆண்டாள் இஷ்ட தெய்வம். அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்யக்கூடியவர் விஜயகாந்த்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் தங்க முலாம் பூச தங்கத்தை அன்பளிப்பாக கொடுத்தவர் விஜயகாந்த் . அத்துடன் விஜயகாந்தின் கல்லூரிக்கு ஆண்டாள் அழகர் என்றுதான் பெயர். மார்கழி மாதத்தில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பார்கள், மேலும் ஆண்டாளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் இறந்த விஜயகாந்தை கருடன் வட்டமிட்டதால் பெருமாளே நேரில் வந்து விஜயகாந்தை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக மக்கள் கண்ணீருடன் கடவுளாக விஜயகாந்தை வழிபட்டு வருகிறார்கள்.