நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விற்கப்பட்டது. பீஸ்ட் வெளியான அதே நாளில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎப் படமும் வெளியானது. இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை எஸ்.ஆர். பிரபு வாங்கி இருந்தார்.
ஆனால் கேஜிஎப் படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென் ஆற்காடு போன்ற முக்கிய நான்கு ஏரியாக்களை எஸ்.ஆர்.பிரபுவிடம் இருந்து கேஜிஎப் படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் வாங்கியது. இந்த நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி எதிர்மறை விமர்சனத்தை பெற்றுது, அதே நேரத்தில் கே ஜி எஃப் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று அணைத்து திரையரங்குகளும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் கே.ஜி.எஃப் படத்தை நான்கு ஏரியாக்களின் உரிமையைப் வாங்கியிருந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜென்ஸ் மூவிஸ், அதே ஏரியாவில் தங்கள் வாங்கி வெளியிட்டிருந்த பீஸ்டு படத்தை பல திரையரங்குகளில் எடுத்து விட்டு, கேஜிஎப் படத்தை திரையிட்டனர். இந்த செயல் கன்னட நடிகர் யாசிடம் மண்ணை கவ்வினார் விஜய் என்பது போன்ற ஒரு செய்தி வெளியானது, இதனால் நடிகர் விஜய்க்கு மிக பெரிய அவமானத்தை பெற்று தந்தது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகும் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்குவதற்கு பல தயாரிப்பாளர்கள் போட்டியில் இருந்தனர். இதில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்ம் போட்டியில் இருந்தது. வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு தான் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் பீஸ்ட் பட விவகாரத்தை மனதில் வைத்து கொண்டு, நடிகர் விஜய் எந்த ஒரு காரணத்திற்காகவும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ஸ் மூவிஸ்க்கு வாரிசு படத்தை விற்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வாரிசு படத்தை வாங்குவதில் போட்டியில் இல்லாத மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்திடம் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வாரிசு படத்தை வாங்கியுள்ள லலித்திடம் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஏரியா வாரியாக கேஜிஎப் படத்தை எஸ்.ஆர்.பிரபு விற்பனை செய்தது போன்று நீங்கள் வாரிசு படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விற்கக் கூடாது என்று விஜய் கண்டிஷன் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஏற்கனவே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்க முட்டி மோதி கடைசியில் வெளியிட முடியாமல் ஏமாற்றமடைந்தார் உதயநிதி ஸ்டாலின்.
தற்பொழுது விஜயின் வாரிசு படத்தை பொங்கல் அன்று தன்னுடைய நிறுவனத்தில் சார்பில் வெளியிடுவதற்கு பல முயற்சிகள் எடுத்தும் படுதோல்வி அடைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் தற்பொழுது துபாயில் இருக்கும் விஜய் தொடர்பு கொள்வதற்காக ரெட் ஜென்ஸ் மூவிஸ் தரப்பில் இருந்து முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விஜய் தமிழகம் வந்த பின்பு அவரிடம் பேசி எப்படியாவது வாரிசு படத்தை பேசி தங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் ரெட் ஜெயன்ட்ஸ் தரப்பில் இருப்பதாகவும், ஆனால் தனது படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்க்கு கொடுக்கக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.